ஜெயேந்திரர் ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு மனு
டெல்லி:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைஎதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தன்னை ஜாமீனில் விடக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஜெயேந்திரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்தநீதிபதி ஆர்.பாலசுப்ரமணியம், ஜெயேந்திரரை ரூ. 25,000 சொந்த ஜாமீனிலும் அதே தொகைக்கு மேலும் இருவரின் ஜாமீனிலும்விடுவிக்க உத்தரவிட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவரை சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
இந் நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் துல்சி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிலஹோட்டி தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று மனுத்தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மனுவை சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி ஜெயேந்திரர் தாக்கல் செய்திருந்த மனுவோடு சேர்த்து விசாரிக்கவேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்தது. இந்த மனு தனியே விசாரிக்கப்படும் என்று கூறியது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இந்தக் தாக்குதல் சதியில்ஜெயேந்திரருக்கு நேரடித் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளார்.
இது ராதாகிருஷ்ணனை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் தான் என்றாலும், தாக்கப்பட்ட விதத்தைப்பார்க்கும்போது (உயிர் வாங்கும் அளவுக்கு கடுமையான தாக்குதல்) இதில் சங்கராச்சாரியாருக்கு ஆயுள் தண்டனையே வழங்க முடியும்.
இவ்வளவு பெரிய குற்றம் செய்த ஜெயேந்திரருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது தவறு என்று கூறப்பட்டுள்ளது.
சங்கர்ராமன்: ஜாமீன் மனு நாளை..
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைநடக்கவுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு நேற்று 100 பக்க பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில் கதிரவன், அப்பு, ரவி சுப்ரமணியம்ஆகியோர் கொடுத்துள்ள வாக்குமூலங்களும், இந்த வழக்கில் ஜெயேந்திருக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்களும் தரப்பட்டுள்ளன.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications