பொடா மறு ஆய்வு குழு விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா மறு ஆய்வுக் குழுவின் இரண்டாவது கட்ட விசாரணை சென்னையில் இன்று தொடங்கியது.
தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஆய்வு செய்ய இந்தக் குழு கடந்த டிசம்பர் 12ம் தேதி சென்னைவந்தது.
3 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து பொடா வழக்குகள் குறித்து அது ஆய்வு செய்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 26 நக்சலைட்டுகள் ஆகியோர் ஆஜராகி விளக்கம்அளித்தனர்.
இந் நிலையில் இன்று முதல் 2வது கட்ட விசாரணை தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த விசாரணை நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications