எய்ட்ஸ் பாதித்த மகனை கொல்ல முயன்ற பெற்றோர்!
மதுரை:
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 14 வயது மகனைக் விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மேலூர் அருகே உள்ள தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சதீஷ். சதீஷுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை நடந்தது.
அப்போது சதீஷுக்கு ஏற்பட்ட ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் இருந்துள்ளது. இதையடுத்து அந்த எய்ட்ஸ் வைரஸ் சதீஷுக்கும் பரவியது.
மீண்டும் சதீஷுக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. அப்போதுதான்சதீஷுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது உறுதியானது.
இதனால் அவனது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந் நிலையில் சதீஷின் உடல் நிலை தொடர்ந்து சீர் கெட்டு வந்தது. சில நாட்களுக்குமுன் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து சதீஷ் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மகன் எய்ட்ஸால் அவதிப்படுவதைப் பொறுக்க முடியாத சரவணன் தம்பதியினர் துடித்தனர். மேலும், சதீஷைப் பார்த்து எய்ட்ஸ்நோய்க்காரன் என்று ஊரார் கேலி செய்து வந்ததும் அவர்களது வேதனையை அதிகப்படுத்தியது.
இதையடுத்து விஷ ஊசி போட்டு மகனைக் கொலை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்து சதீஷை அழைத்துக் கொண்டு வாடகைக் காரில் சொந்த ஊருக்குக் கிளம்பினர். வழியில்சதீஷுக்கு அவர்களே விஷ ஊசி போட்டுள்ளனர்.
இதைப் பார்த்து விட்ட கார் டிரைவர் உடனே போலீஸுக்குத் தகவல் தெவித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்து வந்துசதீஷை மீட்டு மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சதீஷ் அபாய கட்டத்திலிருந்து மீண்டுள்ளான்.
பெற்ற மகனை விஷ ஊசி போட்டுக் கொலை செய்ய முயன்றதாக சரவணனையும், அவரது மனைவியையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications