ஆர்டிஓ ஆபிஸ்களில் ரெய்ட்: வசூல் ராஜாக்கள் கைது
சேலம்:
சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தி வசூலில்ஈடுபட்டிருந்த ஊழியர்கள் 18 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள லஞ்சப் பணம் சிக்கியது.
லஞ்சத்தில் திளைக்கும் முக்கிய அலுவலகங்களில் ஒன்று போக்குவரத்து அலுவலகம். எல்.எல்.ஆர், லைசென்ஸ், வாகனப் பதிவு, பிட்னஸ்சர்டிபிகேட் என எல்லாவற்றுக்கும் இங்கே காசு தான். 8 போடு, 13 போடு என்று ஆரம்பித்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைவசூலோ வசூல் நடக்கும்.
மாதம் ரூ. 7,500 சம்பளம் வாங்கும் பிரேக் இன்ஸ்பெக்டர் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ. 50,000 வரை லஞ்சம் ஈட்டிவிடுவார். அவருக்குகீழே, மேலே இருக்கும் எல்லா மட்ட அதிகாரிகள், ஊழியர்களும் பல வகைகளில் லஞ்சம் வாங்குவார்கள்.
ஆண், பெண் பேதமில்லாமல் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் வேலை பார்க்கும் அலுவலகம் தான் ஆர்.டி.ஓ. அலுவலகம். இங்கு லஞ்சஒழிப்புப் போலீஸ் ரெய்ட் நடத்துவதும், அப்போது டிராயர், பேக், குப்பைத் தொட்டி என பல இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கில்லஞ்சத்தைக் கைப்பற்றுவதும் வாடிக்கை.
சிலர் சஸ்பெண்ட் ஆவார்கள், கைதாவார்கள். அடுத்த சில மாதங்களில் மீண்டும் அதே இடத்தில் வேலைக்கு வந்து மீண்டும் லஞ்சம்வாங்குவார்கள்.
இந்த வழக்கமான ரெய்ட் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலங்களில் நேற்றும் இன்றும் நடந்தது. லஞ்சஒழிப்பு போலீஸார் திடீர் ரெய்ட் நடத்தி சேலம் மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 9 பேரைக் கைது செய்தனர். இங்கு ரூ. 19,567 லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் (இது லாரிகள் நகரம், இதனால் பெருமளவில் லஞ்சம் கிடைக்கும்) ரூ. 1.44 லட்சம் பணம்சிக்கியது. இதை வாங்கிய 7 ஊழியர்கள், புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ரூ.7, 600 கைப்பற்றப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் போக்குவரத்து துணை ஆணையர் சிவலிங்கம், சேலம் ஆர்.டி.ஓ. ஆறுமுகம், நாமக்கல் ஆர்.டி.ஓ. ஆரோக்கியசாமி ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகள் இந்த வழக்கில் இருந்து நிச்சயம் வெளியே வந்துவிடும், மீண்டும் லஞ்சம் வாங்கும், மீண்டும் ரெய்ட் நடக்கும், மாட்டுவார்கள்.நாங்களும் மறுபடியும் நியூஸ் போடுவோம்!. ஆர்.டி.ஓ. ஆபிஸா கொக்கா...!!












Click it and Unblock the Notifications