ராஜபாளையம் நாய்களுக்கு புது கெளரவம்
சென்னை:
பிரபலமான ராஜபாளையம், கோம்பை நாய்களை கெளரவிக்கும் வகையில், மத்திய அரசு நினைவு தபால் தலை வெளியிட்டுள்ளது.
இந்திய நாய்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்து வந்த 3 நாள் தேசிய நாய்க் கண்காட்சி
நிறைவு பெற்றது. 3 நாள் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான நாய்கள் கலந்து கொண்டு கண்ணுக்கு விருந்தளித்தன. நாய்களுக்காக பல்வேறுபோட்டிகளும் நடத்தப்பட்டன.
நிறைவு நாளன்று இந்தியாவைச் சேர்ந்த நான்கு வகையான நாய்களை கெளரவப்படுத்தும் வகையில் நினைவு தபால் தலைகளை மத்தியதகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட்டார்.
ராம்பூர் நாய், இமாலயன் ஷீப் ரக நாய், கோம்பை நாய், ராஜபாளையம் நாய் ஆகியவைதான் இந்த
பெருமையைப் பெற்ற நாய்கள். இந்தியாவில் நாய்களைப் போற்றி தபால்தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இது குறித்து இந்திய நாய்கள் சங்கத் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் கூறுகையில், இந்திய நாய்களை பலரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. மிகச் சிறந்த தன்மைகள் கொண்ட இந்திய நாய்கள் நீண்ட காலமாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
இந் நிலையை மாற்றும் பொருட்டே நான்கு வகையான இந்திய நாய்களைக் கெளரவப்படுத்தி தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளதுஎன்றார். நிகழ்ச்சியில் தபால் தலைகளை வெளியிட்ட தயாநிதி மாறனுக்கு லேப்ரடார் வகை நாய்க் குட்டி பரிசாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர்நாய்கள் சங்கம் சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் தயாநிதி மாறனிடம் பாலசுப்ரமணியம் வழங்கினார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications