நாகையில் 1,626 பேரைக் காணவில்லை
நாகப்பட்டினம்:
![]() |
தமிழகத்தில் சுனாமி அலைகளினால் நாகை மாவட்டத்தில்தான் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டது. மொத்தம் 77 கடலோர கிராமங்கள்சேதமடைந்தன. ஏராளமான உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. இம் மாவட்டத்தில் சுமார் 8,000 பேர் பலியாகியுள்ளனர்.(அரசின் கணக்குப்படி 6,023 பேர் பலியாயகியுள்ளனர்). பல ஆயிரம் பேரைக் காணவில்லை.
இந் நிலையில் காணாமல் போன தங்களது குடும்பத்தாரை மீட்டுத் தருமாறு ஏராளமான புகார்கள் நாகை மாவட்ட காவல் நிலையங்களில்தரப்பட்டு வருகின்றன. இதுவரை 1,626 பேர் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளன. இந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டேஉள்ளது.
போலீசாரிடம் இதுவரை தரப்பட்டுள்ள புகார்களின் அடிப்படையில், வேளாங்கண்ணியில் 943 பேரையும், பொறையாறில் 193பேரையும், நாகூரில் 150 பேரையும், நாகை டவுனில் 132 பேரையும், கீழையூரில் 95 பேரையும் காணவில்லை.
அதேபோல் வெளிப்பாளையத்தில் 54 பேரையும், திருவெண்காட்டில் 33 பேரையும், பூம்புகாரில் 8 பேரையும், தலைஞாயிறில் 7பேரையும், புதுப்பட்டினத்தில் 6 பேரையும், வேதாரண்யத்தில் 5 பேரையும் காணவில்லை.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வேளாங்கண்ணியில் அதிக கூட்டம் கூடியதால் அங்குதான் காணாமல் போனவர்களின் எண்ணிக்கைமிக அதிகமாக உள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 219 பேர் இங்கு காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு:
பெங்களூர்- 90 பேர், கேரளா- 54 பேர், ஆந்திரா- 28 பேர், பாண்டிச்சேரி- 23 பேர், மும்பை- 9 பேர், மத்தியப் பிரதேசம்- 5 பேர்,இலங்கை- 5 பேர், நாக்பூர்- 3 பேர், குஜராத்- 1, கனடா- 1 என மொத்தம் 219 பேர் காணாமல் போனதாக புகார்கள் வந்துள்ளன.
இதற்கிடையே வேளாங்கண்ணியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் புகைப்படங்கள், அங்குள்ள தகவல் மையத்தில் பார்வைக்குவைக்கப்பட்டுள்ளன.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்













Click it and Unblock the Notifications