சுனாமி: பிரதமர் முன் வைகோ- பொன்னையன் மோதல்
டெல்லி:
![]() |
சுனாமி குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பிரதமர் தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, சோனியாகாந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
அதிமுக சார்பில் பொன்னையன் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பொன்னையனுக்கும், வைகோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம்ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம்
வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. வைகோ பேசுகையில், சுனாமி தாக்குதல் நடந்த சில நாட்கள் தமிழக அரசுபக்கவாதம் வந்ததுபோல செயலற்றுப் போயிருந்தது. நிவாரணப் பணிகள் நடைபெறாமல் ஸ்தம்பித்துப் போய்க் காணப்பட்டது.
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் சிக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்களை தமிழக அரசு காப்பாற்றியதாகக் கூறப்படுதுதவறு. உண்மையில் மீனவர்கள்தான் காப்பாற்றினர் என்றார்.
இதைத் தொடர்ந்து பொன்னையன் குறுக்கிட்டு, இது அபாண்டமான, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டு.சுனாமி வருவதை முன்கூட்டியே அறியும் தொழில்நுட்பம் இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது.
ஆனால் சுனாமி பாதிப்பு குறித்து தமிழக அரசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யவில்லை என்று வைகோ அபத்தமான குற்றச்சாட்டைக்கூறியிருக்கிறார். இவரை தொடர்ந்து பேச பிரதமர் அனுமதிக்கக் கூடாது என்றார் காட்டமாக.
ஆனால் வைகோ தொடர்ந்து பேசுகையில், அரசியல் நோக்கத்துடன் நான் பேசவில்லை. பேரழிவு நடந்த நேரத்தில் நடந்த உண்மைகளைமத்திய அரசுக்கும் தெரிவிக்க வேண்டியது எனது கடமை என்று பேசினார். அவரை தொடர்ந்து பேசுமாறு திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலுஊக்குவித்தார்.
பொன்னையனும், வைகோவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் சலலசலப்பு ஏற்பட்டது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!













Click it and Unblock the Notifications