ஜெயலட்சுமி: 2 இன்ஸ்பெக்டர்களிடம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக 2 இன்ஸ்பெக்டர்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஜெயலட்சுமி தொடர்பான வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். திடீர்நகர் இன்ஸ்பெக்டராக இருந்தஇளங்கோவனின் மைத்துனர் முருகவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெயலட்சுமி மீது ரூ.3.50 லட்சம் மோசடி செய்ததாகமதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் ரவீந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணைநடத்தினர். இவர் மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தபோது தான் ஜெயலட்சுமி மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

சக போலீஸ் அதிகாரிகளின் தூண்டுதலினால் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா, புகாரை வாங்கி விசாரணைநடத்திய பின் வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் ரவீந்திரனிடம்கேட்டனர். இந்த விசாரணை 45 நிமிடம் நீடித்தது.

இதேபோல் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலுவிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர். இவர் உடுமலைப் பேட்டையில்இன்ஸ்பெக்டராக இருந்தபோது, துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டிக் கற்பழித்ததாக ஜெயலட்சுமி புகார் கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து சுந்தரவடிவேலுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ அலுவலகத்தில் 4 மணிநேரம் இந்த விசாரணைநடந்தது. இந்த 2 இன்ஸ்பெக்டர்கள் தவிர 3 போலீசாரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+