பெரியவருக்கு போலீஸ் வேன்; சின்னவருக்கு மட வேன்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

Vijayendrarஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது அவரை சங்கர மட வேனில் ஏற அனுமதிக்காத போலீஸார் விஜயேந்திரரை மட்டும் சங்கரமட வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் வைத்து ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டபோது, விமானநிலையத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு வேனில் அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது ஜெயேந்திரர் சங்கர மடத்திற்குச் சொந்தமான வேனில் ஏற முயன்றபோது அதை போலீஸார் அனுமதிக்கவில்லை.போலீஸ் வேனில்தான் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு ஜெயேந்திரர் ஆட்சேபம் தெரிவிக்கவே டாடா சுமோ காரில்அவரை காஞ்சிபுரம் அழைத்துச் சென்றனர்.

நேற்று விஜயேந்திரர் கைது செய்யப்பட்டபோது அவரை சங்கர மடத்திற்குச் சொந்தமான மஞ்சள் நிற வேனில்தான் போலீஸார்அழைத்துச் சென்றனர். ஏராளமான போலீஸ் வாகனங்கள் கொண்டு வரப்பட்டிருந்தபோதிலும், விஜயேந்திரரை போலீஸ் வேனில்போலீஸார் ஏற்றவில்லை.

விஜயேந்திரர் கைது செய்யப்பட்டதும் சங்கர மடம் வெறிச்சோடிக் காணப்பட்டது. மடத்தைச் சுற்றிலும் ஏராளமான போலீஸார்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+