19ம் தேதி விஜயேந்திரர், ரகு ஜாமீன் மனு விசாரணை
செங்கல்பட்டு:
விஜயேந்திர், அவரது தம்பி ரகு, சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யர் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 19ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள விஜயேந்திரர், ரகு, இந்த வழக்கோடு மடத்தின் கணக்கு வழக்கு மோசடியிலும்கைதாகியுள்ள சுந்தரசே அய்யர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தங்களை ஜாமீனில் விடக் கோரி இருவரும் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் இன்று விசாரைணக்கு வந்தன. அப்போது இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகநீதிபதி அக்பர் அலி அறிவித்தார்.
முன்னதாக விஜயேந்திரரின் ஜாமீன் மனு 17ம் தேதி விசாரிக்கப்படுவதாக இருந்தது. அது இப்போது மேலும் 2 நாட்களிக்கு தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.
சகோதரர்கள் சந்திப்பு:
இதற்கிடையே சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜயேந்திரரை அவரது சகோதரர்களான பிரபாகர், குமார் ஆகியோர்இன்று சந்தித்துப் பேசினர்.
கலவை மடத்தில் குவியும் பக்தர்கள்:
இதற்கிடையே கலவை மடத்தில் தங்கியுள்ள ஜெயேந்திரரை சந்திக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துவிட்டது.
நேற்று அவரை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணாச்சலம், இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் ஆகியோர் சந்தித்தனர்.இன்றும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்க மடத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடரும் பூஜைகள்:
இதற்கிடையே இன்று மூன்றாவது நாளாக ஜெயேந்திரர் சந்திரமெளலீஸ்வரருக்கு தனுர் மாச பூஜைகளை தடையின்றி நடத்தினார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications