சங்கரராமன் கடிதங்கள்: தடயவியல் ஆய்வு முடிந்தது!
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரருக்கு சங்கரராமன் எழுதிய கடிதங்களில் தடயவியல் ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.
சங்கர மடத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பலருக்கும் சங்கரராமன் கடிதம் எழுதியுள்ளார். ஜெயேந்திரருக்கும் அவர் கடிதம்எழுதியுள்ளார். இந்தக் கடிதங்களை தனிப்படை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தக் கடிதங்களை உண்மையிலேயே சங்கரராமன்தான் எழுதினாரா என்பதை அறிய தடவியல் சோதனைக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம்உத்தரவிட்டது.
சென்னையில் உள்ள தடயவியல் பிரிவு அதிகாரிகள் இந்தக் கடிதங்களை ஆராய்ந்தனர். தற்போது இந்த ஆய்வுப் பணிமுடிவடைந்துவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இது தொடர்பாக அறிக்கையை காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜனிடம் தடயவியல் துறை அளிக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications