சட்டீஸ்கர் செல்லும் தமிழக அதிரடிப்படை
ராய்ப்பூர்:
வீரப்பனை வேட்டையாடி வீழ்த்திய தமிழக சிறப்பு அதிரடிப்படையின் 2 கம்பெனி வீரர்கள், சட்டீஸ்கர் மாநிலத்தில்நக்சலைட்டுகளை வேட்டையாட செல்லவுள்ளனர்.
சட்டீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் கூட்டம் நடந்தது. நக்சலைட்டுகளால்பாதிக்கப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த டிஜிபிக்கள், உயர் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் சிறப்புஅதிரடிப்படை டிஜிபி விஜயக்குமார் கலந்து கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அனில் செளத் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் சட்டீஸ்கர் மாநிலஉள்துறை அமைச்சர் பிஜ்மோகன் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டீஸ்கர் மாநிலத்தில் சுர்குஜா, பாஸ்டார் ஆகிய பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில்சட்டீஸ்கர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வேட்டையை வலுப்படுத்தும் வகையில் தமிழக விசேஷ அதிரடிப்படையின் 2 கம்பெனி வீரர்கள் சட்டீஸ்கர் வரவுள்ளனர்.காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதிலும் காட்டை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் உளவு நடவடிக்கைகளைமேற்கொள்வதிலும் தமிழக வீரர்கள் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக உள்ளனர்.
நக்சலைட்டுகளை ஒடுக்க அனைத்து உதவிகளையும் சட்டீஸ்கர் போலீஸாருக்கு செய்யத் தயாராக இருப்பதாக விஜயக்குமாரும்உறுதியளித்துள்ளார். நக்சலைட் வேட்டையில் ஈடுபட்டுள்ள சட்டீஸ்கர் காவல்துறையைச் சேர்ந்த 150 போலீஸாருக்கு, தமிழகசிறப்பு அதிரடிப்படை வீரர்கள் சிறப்பு பயிற்சி அளிக்கவுள்ளனர் என்றார் அவர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications