ஜெ அரசை டிஸ்மிஸ் செய்ய பாஜக கோரிக்கை
கலவை:
ஜெயேந்திரர் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றகோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் இன்று முதல் ஜனவரி 22ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கலவையில் தங்கியிருக்கும் ஜெயேந்திரரை அகில இந்திய பாஜக செயலாளர் இல.கணேசன் சந்தித்துப் பேசினார். பின்னர் வெளியே வந்தஅவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மடத்தின் மீது தமிழக அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் ஜெயேந்திரர் தொடர்ந்து மெளன விரதம் இருந்து வருகிறார்.இதனால் அமைதி திரும்பி விட்டது என்று கூற முடியாது.
வழக்கு விசாரணையில் இருக்கும்போது அதைப் பற்றி கருத்து கூறுவது முறையல்ல. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்குப் பின்னணியில்ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்பது எதிர்காலத்தில் தெரியவரும்.
காஞ்சி மடத்தை ஏற்று நடத்தும் எண்ணமில்லை என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இந்த உறுதிமொழி காப்பாற்றப்பட வேண்டும்என்று விரும்புகிறோம்.
ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது செய்யப்பட்டது இந்து மதத்தை அழிக்கும் நோக்கத்தில் சங்கர மடத்திற்கு எதிராகத் தொடுக்கப்பட்டபோராகும். அவர்கள் மீதான வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும், தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்றும் பாஜக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17ம் தேதி (இன்று) முதல் 22ம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும்.
ஜெயேந்திரர் கைது தொடர்பாக பாஜகவின் கோரிக்கைகளை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டதை முதல்வர் ஜெயலலிதாகண்டித்திருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக அவர் சட்டசபையில் பேச முடியும் எனும்போது, அது குறித்து வாஜ்பாய் கருத்துதெரிவித்ததில் தவறேதும் இல்லை என்று கூறினார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications