ஜெயேந்திரரை வட நாட்டுக்கு அனுப்ப கோரும் மனு 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி:
ஜெயேந்திரர் தென் இந்தியாவில் தங்கியிருக்கத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதானவிசாரணை வருகிற 21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ஜெயேந்திரருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது அவர் காஞ்சி மடத்துக்குச்செல்ல தடை விதித்தது. இதனால் அவர் கலவையில் தங்கியிருக்கிறார்.
இந் நிலையில் நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயேந்திரர் தென் இந்தியமாநிலங்களை விட்டு வட நாட்டில் தங்கியிருக்க உத்தரவிட வேண்டும், தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திடஉத்தரவிட வேண்டும் என்று அதில் அரசு கோரியது.
மேலும், ஜாமீன் மனு விசாரணையின்போது இந்தக் கொலை வழக்குத் தொடர்பான ஆதாரங்கள் குறித்து போலீசார்மீது சந்தேகம் எழுப்பி தெரிவித்த சில கருத்துக்களை உச்ச நீதிமன்றம் வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரிஇன்னொரு மனுவையும் தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 21ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது.
ஆடிட்டர் வழக்கில் மேல்முறையீடு:
அதேபோல் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரருக்கு உயர் நீதிமன்றம் அளித்த ஜாமீனை எதிர்த்து தமிழக அரசுதாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications