ஏற்காடு பெண்கள் நிர்வாணப் பூஜை ரத்து
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு மலையில் உள்ள வெள்ளக்கடை கிராமத்தில் போலீஸ் கண்காணிப்பு காரணமாக பெண்களின் நிர்வாணப் பூஜைரத்து செய்யப்பட்டது.
இந்தக் கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் தினத்தையொட்டி பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிர்வாணப் பூஜை நடத்தப்படுவதுவழக்கம்.
மழை வேண்டியும், கிராமத்தை நோய்கள் தாக்காமல் இருக்கவும் வேண்டி இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஆனால், இதை மறைந்திருந்துபார்க்க சேலத்தையும் சுற்று வட்டாரத்தையும் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஏற்காடு மலையேறுவது வழக்கம்.
இதையடுத்து இந்த நிர்வாண பூஜைக்கு கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அமைப்பினர் மற்றும் சமூக நல அமைப்புகள் கடும் எதிர்ப்புதெரிவித்து வந்தன. இதைத் தொடர்ந்து போலீஸார் இந்தப் பூஜையை தடுத்து வருகின்றனர்.
இந் நிலையில், இந்த ஆண்டும் நிர்வாணப் பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 9 மணிக்கு நிர்வாணப் பூஜைநிடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வெள்ளக்கடை கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நிர்வாணப் பூஜை நடத்தக் கூடாது. மீறி நடத்தினால் கடும்நிடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் இன்று காலை திட்டமிட்டபடி நிர்வாணப் பூஜைநடக்கவில்லை.
நிர்வாண பூஜை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் வேறு நாளில் நடைபெறும் எனவும் கிராம மக்கள் கூறுகின்றனர். நிர்வாணப் பூஜைக்குப்பதில் எருதாட்டம் எனப்படும் நிகழ்ச்சி மட்டும் இன்று நடத்தப்பட்டது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications