• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யார் இந்த ஞானப்பிரசேந்திர சரஸ்வதி?

By Staff
|

சென்னை:

Jeyandrar போலீஸ் காவலில் இருக்கும்போது தந்த வாக்குமூலத்தில் விஜயேந்திரரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்த ஜெயேந்திரர், அவரைஒதுக்கிவிட்டு தனது உண்மையான சீடரான ஞானப்பிரசேந்திர சரஸ்வதியை மூன்றாவது சங்கராச்சாரியராக நியமிக்கத்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மகா பெரியவர் இருந்தபோது ஜெயேந்திரரின் நடவடிக்கைகளால் மனம் வெதும்பிப் போய் தான், பால பெரியவராக விஜயேந்திரரைநியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது அதே ஸ்டைலில் ஜெயேந்திரரும் விஜயேந்திரருக்குப் போட்டியாக ஞானப்பிரசேந்திரரை மடத்துக்குள் கொண்டு வரத்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் ஜெயேந்திரர் தரப்பு மறுக்கிறது.

மத்தூர் ஸ்வாமிகள்:

இருப்பினும் திடீர் முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த ஞானப்பிரசேந்திர சரஸ்வதி யார் என்ற கேள்வி மடத்தின் பக்தர்களுக்கு மட்டுமின்றிசங்கரராமன் கொலை வழக்கை கவனித்து வரும் அனைவருக்கும் எழுந்துள்ளது.

இவர் குறித்து விசாரணை நடத்தி நக்கீரன் வெளியிட்டுள்ள உதுஞிடூதண்டிதிஞு ரிப்போர்ட்:

இந்த ஞானப்பிரசேந்திர சரஸ்வதியின் இன்னொரு பெயர் மத்தூர் சுவாமிகள். கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்தில் துங்கபத்ராநதிக்கரையில் உள்ள மத்தூரில் வசித்து வருவதால் இவருக்கு அந்தப் பெயர்.

மைசூர் மன்னர்களால் தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட வேத பண்டிதர்கள் பின்னாளில் இங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். இந்தகிராமத்தில் வர்ணாஸ்சிரம தர்மம் தவறாமல் கடைபிடிக்கப்படுகிறது.

இங்கு தொட்டதற்கெல்லாம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற ஜாதி வேறுபாடு தான். மேல் ஜாதியினர் எல்லோரும் சரளமாக சமஸ்கிருதம்,கன்னடம் பேசுகின்றனர். தமிழகத்தில் இருந்து குடியேறியவர்கள் தான் என்றாலும் சமஸ்கிருதம் அளவுக்குத் தமிழ் அவ்வளவாகத்தெரியவில்லை.

மைசூர் மன்னர்கள் கிரயம் செய்து தந்த நிலங்களின் முதலாளிகளாக பிராமண சமூகத்தினர் விளங்குகின்றனர்.

இது தான் மத்தூரின் பேக்கிரவுண்ட்.

ஞானப்பிரசேந்திரர் ஆன தியாகராஜன்:

இனி ஞானப்பிரசேந்திரர் பற்றி பார்ப்போம்.

மும்பையில் ஸ்ரீனிவாசன்- சாவித்ரி தம்பதியின் மகன் தான் இந்த ஞானப்பிரசேந்திர சரஸ்வதி. இவரது இயற்பெயர் தியாகராஜன். எம்.காம்முடித்துவிட்டு சிஏ செய்தார். ஒரு ஆடிட்டரிடம் உதவியாளராக இருந்துவிட்டு தனது இளம் வயதில் ஆடிட்டராக மும்பையிலேயேவாழ்க்கையைத் துவக்கினார்.

கற்பூர புத்தி, மகா புத்திசாலி. ஆனாலும், மனதில் ஆன்மீகத் தேடல் ஆரம்பிக்கவே காஞ்சி மடத்துக்கு வர ஆரம்பித்துள்ளார். தமிழ்,சமஸ்கிருதம், ஆங்கிலம், கன்னடம், மராத்தி, இந்தி, தெலுங்கு என பல மொழி வித்தகர்.

ஜெயேந்திரரின் ஆசியோடு மத்தூருக்குச் சென்று 5 வருடம் அங்கேயே தங்கியிருந்து வேதம் படித்திருக்கிறார்.

பிக்ஷாம்தேஹி:

துங்கா நதிக்கரையில் பர்ணசாலை அமைத்து யோகியைப் போலவே வாழ்ந்திருக்கிறார். உணவு சமைப்பதில்லை. ஒரு வேலை மட்டுமேஉண்பார். மத்தூரில் உள்ள ஏதாவது ஒரு பிராமண இல்லத்துக்குச் சென்று வெளியில் இருந்தவாரே பிக்ஷாம்தேஹி என்று குரல் தருவார்.

அங்கு தரப்படும் உணவை, தான் உண்டுவிட்டு மிச்சத்தை துங்கா நதி மீன்களுக்கு போட்டுவிட்டு தியானம், யோகம், கல்வி என்றேஇருந்துள்ளார்.

Viyayendrar யார் வீட்டிலும் தங்குவதில்லை, யாருடனும் அதிகம் பேசுவதும் இல்லை. பணத்தை வாங்க மாட்டார். பெண்களிடம் அநாவசிய பேச்சுவைக்க மாட்டார். தனக்குப் பிடிக்காத செயலை யாராவது செய்தால் உண்ணாவிரதம் இருப்பாரே தவிர அதிர்ந்து பேச மாட்டார்.

சுவாமிகள் மாயம்:

ஆந்திர மாநிலம் மெகபூப் நகரில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது ஞானப்பிரசேந்திர சரஸ்வதி காஞ்சிபுரம் மடத்தில்இருந்திருக்கிறார். இந்தச் சம்பவம் மனதை வாட்டிவிட அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். போன இடமும் யாருக்கும் தெரியவில்லை.மத்தூருக்கும் வரவில்லை.

சதுர் மாசத்தில் சன்னியாசிகள் வெளியில் நடமாடுவதில்லை என்பதால் ஏதோ ஒரு மடத்தில் தான் அடைக்கலம் புகுந்திருக்கிறார். பின்னர்ஒரு பிரபல ஆடிட்டர் மூலம் இவர் இருக்கும் இடம் தெரிந்து ஜெயேந்திரர் தரப்பு இவரை தமிழகம் வரவழைத்திருக்கிறது.

வேலூர் சென்று ஜெயேந்திரை ஜெயிலில் சந்தித்துவிட்டுப் போய் இருக்கிறார். ஆனால், மீண்டும் அவர் போன இடம் தெரியவில்லை.

கலவையில்..

விஜயேந்திரர் தரப்புக்கும் இவருக்கும் எப்போதும் ஒத்து வராது என்கிறார்கள் மடம் குறித்த உள் விவரங்களை அறிந்தவர்கள். இதனால்தான் ஜெயேந்திரர் இல்லாத காஞ்சி மடத்தைத் தவிர்த்தார் என்கிறார்கள்.

இப்போது விஜயேந்திரர் உள்ளே போய்விட்ட நிலையில், கலவையில் தங்கியுள்ள ஜெயேந்திரரிடம் திரும்பி வந்துவிட்டார்ஞானப்பிரசேந்திர சரஸ்வதி.

அவருடன் பூஜை, புணஸ்காரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இவர் விரைவில் மூன்றாவது சங்கராச்சாரியாராக நியமனமாவார்என்கிறார்கள்.

ஆனால், இவரையாவது தமிழக அரசு விட்டு வைக்குமா அல்லது காட்டு பங்களா விசிட்டிங் கார்டைக் கொடுத்து அங்கு வரவழைத்துகிண்டி எடுக்குமா என்று தெரியவில்லை.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X