விஜயேந்திரருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரரை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் அனுமதிவழங்கியது.
விஜயேந்திரரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதிக்கக் கோரி காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில்போலீசார் மனு தாக்கல் செய்தனர். இதன் மீது இன்று விசாரணை நடந்தது.
இதற்காக விஜயேந்திரர் பலத்த பாதுகாப்புடன் சென்னை மத்திய சிறையிலிருந்து காஞ்சிபுரத்திற்குக் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில்அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், சங்கரராமன் கொலை வழக்கில், கூலிப் படையினருக்குப் பணப் பட்டுவாடா செய்ததுகுறித்து விஜயேந்திரரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்ட விஜயேந்திரர், ஏற்கனவே பலமுறை என்னிடம் விசாரணை நடத்தியுள்ளது போலீஸ். அப்போதே தேவையானஅனைத்து விவரங்களையும் நான் தெரிவித்து விட்டேன். இப்போது மீண்டும் போலீஸ் காவல் கோருவது தேவையற்றது என்றார்.
இதைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் தொடர்ந்து பேசுகையில், விஜயேந்திரன் தம்பி ரகுவின் மூலம்தான் கூலிப் படையினருக்கு பணம்பட்டுவாடா செய்யப்பட்டதாக ரவிசுப்ரமணியம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். எனவே அதுகுறித்து விஜயேந்திரரிடம்விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது என்றார்.
இதையடுத்து தனது உடல் நலத்தை முன் வைத்து விஜயேந்திரர் போலீஸ் காவலுக்கு செல்ல முடியாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உத்தமராஜன், 5 நாள் போலீஸ் காவலில் விஜயேந்திரரை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைஏற்க மறுத்து, ஒரு நாள் மட்டும் அவரை விசாரிக்க அனுமதி தந்தார்.
இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை அவரிடம் விசாரணை நடத்திவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.இதையடுத்து இளையவர் காட்டு பங்களாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை ஜெயேந்திரர், அப்பு, ரவிசுப்ரமணியம், சுந்தரேச அய்யர் ஆகியோர் போலீஸ் காவலில் வைத்துவிசாரிக்கப்பட்டுள்ளனர். அந்த வரிசையில் விஜயேந்திரும் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கோர்ட்டிலிருந்து வெளியே வந்த விஜயேந்திரரிடம், சங்கர மடத்திற்கு 3வது சங்கராச்சாரியார் நியமிக்கப்பட்டுள்ளாரா என்றுசெய்தியாளர்கள் கேட்டபோது, இல்லை என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டிவிட்டுப் போனார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications