ராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறை!
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே பெண் கொடுக்காத தகராறில் 2 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரருக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்கஉத்தரவிட்டு விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் விஜய காண்டீபன். இரு ஆண்டுகளுக்கு முன் தனக்குப் பெண் தர மறுத்ததனது தாய்மாமன் சீனிவாசன், அவரது மனைவியை இவர் சுட்டுக் கொன்றார்.
பின்னர் அவர்களது 2 மகள்கள் உள்ளிட்ட 5 பேரை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். இதில் 5 பேரும் படுகாயமடைந்தனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காண்டீபன் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கை பெரியகுளம்விரைவு நீதிமன்றம் விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார். அதில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் அடிப்படையில், குற்றவாளி விஜயகாண்டீபனுக்கு அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டார் நீதிபதி. மேலும் அவருக்கு ரூ. 1.91 லட்சம்அபராதமும் விதித்தார்.
துப்பாக்கிச் சூட்டால் படுகாயமடைந்த 5 பேருக்கும் இந்தத் தொகை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ரேவதி உத்தரவிட்டார்.
தீர்ப்பைத் தொடர்ந்து விஜய காண்டீபன் மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications