மனித உரிமை ஆணையம் தலையிட பாஜக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Kanchi Mutt காஞ்சி சங்கர மடத்தின் மீதான தமிழக அரசின் நடவடிக்கைகளில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும் என்று பாஜககோரிக்கை விடுத்துள்ளது.

அண்மையில் தேசிய ஜனநாயக கூட்டணி குழுவிற்கு தலைமையேற்று தமிழகத்திற்கு வந்த பாஜக எம்.பி. பல்பீர் புஞ்ச், தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் தலைவர் ஆனந்திற்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசின் நடவடிக்கைகள் காஞ்சி மடத்திற்கு எதிராக நடத்தப்படும் போராகவே தெரிகிறது. ஜெயேந்திர் ஜாமீனில்விடுதலையானதும், விஜயேந்திரர் கைது செய்யப்பட்டார். ஜெயேந்திரரின் ரகசிய வாக்குமூலம் அடங்கிய வீடியோ ஆதாரம் செய்திநிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் இந்த வழக்கில் மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது. மடத்தில்இருப்பவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பயத்தில் உள்ளனர். இதனால் மடத்தின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

இரவு நேரங்களில் சம்மன் இல்லாமல் மடத்திலிருப்பவர்களை போலீஸார் அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் மூன்றாம் தரவிசாரணை நடத்தி வாக்குமூலம் தர நிர்ப்பந்திக்கின்றனர்.

மடத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த மனித உரிமை ஆணையம் உடனடியாகஇதில் தலையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+