கூவத்தை "குளிப்பாட்ட" ரூ. 58 கோடி!
சென்னை:
சமுத்திர நதியாகத் திகழ்ந்து இன்று தமிழகத்தின் மிகப் பெரிய சாக்கடையாக மாறிவிட்ட கூவம் ஆற்றைசுத்தப்படுத்த மேலும் ரூ. 58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்,
அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
சென்னை நகரின் மிகவும் மாசுபட்ட நதியான கூவம் ஆற்றை சுத்தப்படுத்த பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம்ஆகிய இடங்களில் கழிவு நீர் சுத்தப்படுத்தும் நிலையங்கள் கட்டப்படவுள்ளன.
பெருங்குடியில் ரூ. 36.88 கோடி மதிப்பிலும் நெசப்பாக்கத்தில் ரூ. 21.21 கோடி மதிப்பிலும் கழிவு நீர் சுத்திகரிப்புநிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கையை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகத்திடம் வழங்கியது. பரிசீலனைக்குப் பின் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ராசாகூறியுள்ளார்.
கூவம் ஆற்றை சுத்தப்படுத்தும் பணிக்கு ஏற்கனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிதியுதவி செய்து வருவதுகுறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
