பிணங்களை வைத்து அரசியல் வேண்டாம்: சந்திரிகா
கொழும்பு:
கடல் கொந்தளிப்பினால் இறந்த நம் மக்களின் சடலங்களை வைத்து யாரும் தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயங்கள் தேடவேண்டாம் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைக்க 3.5 பில்லியன் டாலர் செலவில் நிவாரணத் திட்டத்தைசந்திரிகா தொடங்கி வைத்தார். இதற்கான தொடக்க விழாவில் சந்திரிகாவின் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிஉறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுனாமி தாக்குதலினால் அதிகம் பாதிக்கப்பட்ட இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ள ஹம்பன்டோடாவில் இந்த விழாநடந்தது. இப் பகுதியில் மட்டும் 4,500 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக 6,000 வீடுகள் கட்டப்படவிருக்கிறது.
விழாவில் சந்திரிகா பேசியதாவது:
சுனாமி பாதிப்பிலிருந்த நம் நாட்டை புனரமைப்பதற்கான பணியைத் தொடங்குவோம். இந்த துயரச் சம்பவத்தின் மீது, நமதுமக்களின் கண்ணீர் மீது, நமது மக்களின் சடலங்களின் மீது யாரும் தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயம் தேடுவதை நாங்கள்விரும்பவில்லை.
நமது நாட்டில் உள்ள ஏராளமான இயற்கை வளங்களை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக நமக்குள்சண்டையிட்டு வருகிறோம்.
அதனால் இயற்கை நமக்கு வேண்டிய அளவு பாடம் கற்பித்துவிட்டது. நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றபாடத்தை கற்றுத் தந்துள்ளது என்று கூறினார்.
எரிக் சோல்ஹைம் வருகை:
இதற்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்த நார்வே சிறப்புத் தூதர் எரிக்சோல்ஹைம் கொழும்பு வந்துள்ளார்.
அவர் சந்திரிகா குமாரதுங்கா மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.
சுனாமி தாக்குதல் நடக்கவில்லை என்றால் இருதரப்புக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்ததாக அரசியல் வல்லுநர்கள்கருத்து தெரிவித்துள்ளனர்.
சுனாமியால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடகிழக்குப் பகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சர்வதேச நிதியுதவிக் குழு, இலங்கையில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதாகவும், நிதி நிலைமை சீரழிந்துவருவதாகவும் எச்சரித்துள்ளது. சுனாமி தாக்குதலால் மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாத் துறை மோசமாகபாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications