ஆங்கிலத்தில் சினிமா பெயர்: திருமாவுக்கு திருநா பதிலடி
சென்னை:
தமிழ் மொழியைச் சொல்லி திரைப்படக்காரர்களை மிரட்டக்கூடாது என்று முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னாபுரி காளிகாம்பாள் என்ற புதிய படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர்திருநாவுக்கரசர் கலந்து கொண்டு படப்பிடிப்பைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், தமிழ்ப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கூறுவதுநல்லதுதான். ஆனால் அதை கட்டாயப்படுத்தியோ, மிரட்டியோ வலியுறுத்தக் கூடாது.
சில காரணங்களுக்காக தமிழ்ப் படங்களுக்கு சில நேரங்களில் ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். இதனால்தமிழ் மொழி ஒன்றும் அழிந்து போய் விடாது. அனைத்துப் படங்களுமா ஆங்கிலப் பெயர்களில் வருகிறது?
தமிழில் பெயர் வையுங்கள் என்று திரை உலகினரிடம் எடுத்துச் சொல்லலாம். அதற்காக தமிழ் மொழியைச் சொல்லிஅவர்களை மிரட்டக் கூடாது. அவர்களது தொழிலை செய்ய விடாமல் இடையூறு செய்யக் கூடாது. இதில் அரசியல்நுழைந்து விடக் கூடாது.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. பல மொழி ஆதிக்கங்கள்,பல்வேறு படையெடுப்புகளைத் தாண்டி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி தமிழ். எனவே சினிமாவுக்குதமிழ் பெயர் வைக்காத காரணத்தால் அந்த மொழி அழிந்து விடும் என்பதை ஏற்பதற்ககில்லை என்றார்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications