ஆஸி. ஓபன் டென்னிஸ்: செரீனாவிடம் சானியா தோல்வி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா அமெரிக்காவின் செரீனாவில்லியஸிடம் தோல்வி அடைந்தார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 18 வயது சானியா, முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சின்டி வாட்சனை தோற்கடித்தார். 2வது சுற்றில்ஹங்கேரியின் பெட்ரா மன்டுலாவை வீழ்த்தினார். இதன் மூலம், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 3ம் சுற்றுக்கு முன்னேறிய முதல்இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார்.
இந் நிலையில் இன்று செரீனா வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில்செரீனா வில்லியம்ஸ் எளிதில் வெற்றி பெற்றார்.
மகேஷ் பூபதி இணை வெற்றி:
ஆண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் மகேஷ்பூபதி, ஆஸ்திரேலியாவின் உட்பிரிட்ஜ் இணை, ரஷ்யாவின்ஆண்ட்ரீவ், டேவிடென்கோ இணையை 6-4, 4-6, 6-2 என்ற செட்கணக்கில் தோற்கடித்தது. இதன் மூலம் காலிறுதிக்கு முந்தையசுற்றில் விளையாட தகுதி பெற்றது.
ஷரபோவா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்:
இதற்கிடையே ரஷ்யாவின் மரியா ஷரபேவா சீனாவின் லீ நாவை 6-0, 6-2 என்ற செட்களில் தோற்கடித்து 4 வது சுற்றிற்குமுன்னேறினார். வீனஸ், டேவன்போர்ட் வெற்றி:
இதற்கிடையே பெண்கள் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ், லிண்ட்சே டேவன்போர்ட் ஆகியோரும், ஆண்கள் பிரிவில் டிம்ஹென்மேன், லேடன் ஹெவிட் ஆகியோரும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications