வரதராஜ பெருமாளுக்கு வருமா சம்மன்?: கருணாநிதி
சென்னை:
சங்கரராமன் கொலைக்கு வரதராஜப் பெருமாளே சாட்சி என்று எஸ்.பி. பிரேம்குமார் கூறியிருப்பதைப் பார்த்தால் சாட்சி சொல்ல வருமாறுவரதராஜப் பெருமாளுக்கு சம்மன் போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி நக்கலாகக் கூறியுள்ளார்.
கருணாநிதி இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில்,
நல்ல நாள் பார்த்து, நல்ல நேரம் பார்த்து, வரதராஜப் பெருமாள் சன்னதியில் வைத்துப் பூஜை செய்த பின்னர் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சங்கர மட பக்தர்களுக்கு தான் ஒன்றும் சளைத்தவர் அல்ல என்பதை எஸ்.பி. பிரேம்குமார்நிரூபித்துள்ளார்.
சங்கரராமன் கொலைக்கு வரதராஜப் பெருமாள்தான் சாட்சி, இந்த வழக்கே பெருமாளுக்கும்,
சங்கராச்சாரியார்களுக்கும் இடையே நடப்பதுதான் என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார்.
அவரது கூற்றில் பக்தி ரசம் சொட்டினாலும் கூட சாதாரண பாமரனுக்கு ஏற்படுகின்ற
சந்தேகத்திற்கு என்ன பதில் கிடைக்கும் என்று தெரியவில்லை.
சங்கரராமன் கொல்லப்பட்ட காட்சியை நேரில் பார்த்த பெருமாளுடன் சேர்ந்து அந்தக் கொலையை ஏன் தடுத்து நிறுத்தியிருக்கக் கூடாது?அப்படி தடுத்து நிறுத்த முடியாவிட்டால் ஏன் அப்படிச் செய்யவில்லை என்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டியிருக்குமே?
சங்கரராமன் கொலையை நேரில் பார்த்த வரதராஜப் பெருமாளுக்கு நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல
வருமாறு சம்மன் போகுமா என்பதையும் எதிர்பார்க்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications