வீர சைவ மடத்தை திருப்பி தந்தது அறநிலையத்துறை

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

கும்பகோணம் வீர சைவ மடத்தை மீண்டும் அதன் மடாதிபயிடமே இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

கும்பகோணத்தில் பெரிய மடம் என்று அழைக்கப்படும் வீர சைவ மடம் (கன்னட மொழி பேசுவோருக்கு சொந்தமானது) உள்ளது. இந்தமடத்தில் நிதி முறைகேடுகள் நடப்பதாக வந்த புகாரையடுத்து மடத்தைக் கையகப்படுத்த இந்து அறநிலையத்துறை முடிவு செய்தது.

இதை எதிர்த்து கடந்த 2002ம் ஆண்டு மட நிர்வாகி ஹண்டி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்து அறநிலையத்துறைக்குஆதரவாக தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் சமீபத்தில் மடத்தை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.

மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் வெளியேற்றப்பட்டார். இந் நிலையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளின்நடவடிக்கைக்கு எதிராக ஹண்டி உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் திடீரெனமரணமடைந்தார்.

உயர்நீதிமன்றத்தில் மனு விசாரணைக்கு வந்தபோது, மடத்தை மீண்டும் மடாதிபதியிடமே ஒப்படைக்க அரசு தயாராக இருப்பதாக அரசுதலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் தெரிவித்தார். உயர்நீதிமன்றம் மடத்தை மடாதிபதியிடம் திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந் நிலையில் மடத்தின் மீது நடவடிக்கை எடுத்த சுவாமிமலை அறநிலையத் துறை துணை ஆணையர் தனபாலை தமிழக அரசு பணியிடைநீக்கம் செய்துள்ளது. புதிய துணை ஆணையராக சுவாமிநாதன் என்பவர் நியமிட்டார்.

வீர சைவ மடத்துக்குச் சொந்தமான வீரபத்திர சுவாமி கோயிலில் வைத்து மடத்தின் சாவிகளை மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திரசுவாமிகளிடம், புதிய அறநிலையத்துறை துணை ஆணையர் சுவாமிநாதன் வழங்கினார்.

மடம் திரும்பக் கிடைத்தாலும், இதை சிறப்பாக நிர்வகித்த ஹண்டியை யார் இப்போது திருப்பித் தருவார்கள்? அவர் இல்லாதது மிகுந்தவருத்தம் தருகிறது என்றார் நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+