சுனாமி: கடலோர தடுப்பு சுவர் கட்டும் புலிகள்
முல்லைத்தீவு:
சுனாமி அலைகளின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக தமிழர் வாழும் பகுதிகளில் கடலோரத்தில் தடுப்புச் சுவர் கட்ட விடுதலைப் புலிகள்திட்டமிட்டுள்ளனர். முற்றிலும் விடுதலைப் புலிகளே இந்தச் சுவரை கட்டவுள்ளனர்.
டிசம்பர் 26ம் தேதி நடந்த சுனாமி அலைத் தாக்குதலில் இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்தன.ஆயிரக்கணக்கானோர் பலியாயினர். இந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை விடுதலைப் புலிகளே கவனித்து வருகிறார்கள்.
சுனாமி அலைத் தாக்குதலிலிருந்து எதிர்காலத்தில் தப்புவதற்காக விடுதலைப் புலிகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்கள். இந்தத்திட்டங்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வகுத்துள்ளார்.
அதில் ஒரு பகுதியாக கடலோரப் பகுதிகளில் தடுப்புச் சுவர் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. முல்லைத் தீவு பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர்தூரத்திற்கு வலுவான மண் சுவரைக் கட்ட விடுதலைப் புலிகள்முடிவு செய்துள்ளனர். கடலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள நிலப்பகுதியில் இந்த தடுப்புச் சுவர் கட்டப்படுகிறது.
3 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகத்தில் இந்த தடுப்புச் சுவர் அமையவுள்ளது. பழங்காலத்து தமிழர் கட்டடக் கலையைப் பயன்படுத்தி இந்தத்தடுப்புச் சுவர் முற்றிலும் மண்ணால் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மணல், கருப்பட்டி, வெள்ளைச் சுண்ணாம்பு, பதநீர் உள்ளிட்டவற்றை கலந்து இந்த சுவர் அமைக்கப்படவுள்ளது. இதுகுறித்து தமிழர்மறுவாழ்வு அமைப்புத் தலைவர் சிவனடியார் கூறுகையில், நாங்கள் கட்டப்போகும் மண் சுவர், கான்க்ரீட் சுவரை விட மிகவுமவலுவானதாகவும், உறுதியானதாகவும் அமையும். செலவும் மிக மிக குறைவாகவே இருக்கும்.
நமது மூதாதையர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். இதைத் தொடர்ந்து மாங்குரோவ்காடுகளையும் வளர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தென்னை மரங்களும் கடலோரத்தில் அதிக அளவில் நடப்படும் என்றார் அவர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications