ஜெயேந்திரரை கண்டுகொள்ளாத கலவை மக்கள்
கலவை:
ஜெயேந்திரரைப் பார்க்க கலவை மக்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
முந்தைய தென் ஆற்காடு மாவட்டம் மற்றும் தற்போதைய வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம்தான் கலவை.
இதற்கு பரிமளாபுரம் என்ற பெயர் முன்பு இருந்தது. திப்புசுல்தான் வசம் இந்த கிராமம் இருந்துள்ளது. பின்னர் வெள்ளையர் கைக்குமாறியபோது, கலவை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சின்னக் கிராமமான கலவையில் 10,000 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்களில் ஒரு சில குடும்பங்கள்தான் பிராமணக் குடும்பங்கள்.கலவையில் சங்கர மடம் இருந்தாலும் கூட அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுகிறார்கள் கலவைக்காரர்கள்.
அதற்குக் காரணம் இருக்கிறது. இங்கு சங்கர மடம் இருந்தாலும், மடத்தின் சார்பில் ஊரில் ஒரு நல்ல விஷயம் கூட இதுவரைசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊர் மக்களுக்காக கலவை சங்கர மடம் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லையாம்.
மகா பெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகரேந்திர சுவாமிகள் இங்கு பலமுறை வந்து தங்கியுள்ளாராம். ஆயினும் ஊர் மக்களுக்காகஅவர் எதையும் செய்யவில்லை என்று கலவை மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். அதேபோல ஜெயேந்திரரும் கலவை மக்களுக்காகபெரிய அளவில் எதையும் செய்து தரவில்லை என்கிறார்கள்.
அவ்வப்போது சங்கராச்சாரியார்கள் வந்து தங்கும் ரெஸ்ட் ஹவுஸ் போலத்தான் கலவை மடம் உள்ளது. இந்த ஊரில் உள்ளவர்களுக்குஅது எந்தவிதத்திலும் உதவியாக இருந்ததில்லை என்பது கலவை மக்களின் குற்றச்சாட்டு.
கலவையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், இந்த ஊரில் சங்கர மடம் சார்பில் ஒரு முதியோர் இல்லம், ஊனமுற்றோர் இல்லம் உள்ளது.ஆனால் அதில் எல்லோரும் போய் சேர்ந்து விட முடியாது. பிராமணர்கள் மட்டும்தான் அதில் அனுமதிக்கப்படுவர்.பிராமணர்களுக்காகத்தான் அது நடத்தப்படுகிறது என்றார்.
இதை விடக் கொடுமை என்னவென்றால் ஜெயேந்திரர் கைது சம்பவத்திற்கு முன்பு வரை கலவை மடத்திற்கு பல மதங்களையும்,ஜாதிகளையும் சேர்ந்தவர்களும் வந்து போவார்களாம். ஆனால் இப்போது உடம்பில் பூணூ
சங்கர மடத்தால் தங்களுக்கு எந்தவித பயனும் இல்லை என்று கலவைக்காரர்கள் கூறினாலும், சங்கர மட பக்தர்களால் தங்களுக்கு இப்போதுவியாபாரம் பெருகி விட்டதாக டீக்கடைக்காரர்கள், சிற்றுண்டி விடுதி நடத்துபவர்கள் கூறுகிறார்கள்.
வழக்கமாக விற்கும் விலையை விட இரண்டு மடங்கு விலையை வைத்து தற்போது காசு பார்த்து வருகிறார்களாம் இந்தடீக்கடைக்காரர்களும், விடுதிக்காரர்களும்.
இப்படியாவது வசதி படைத்தவர்களிடம் முடங்கிக் கிடக்கும் காசு எங்களுக்கும் வந்து சேரட்டுமே என்கிறார்கள் அவர்கள்.
கலவை மக்களின் இந்த விரக்திக்கு சங்கர மடத்தின் பதில் என்ன? கலவை ஒரு கிராமம். இங்கிருப்பவர்கள் அனைவரும் விவசாயிகள்.இவர்களிடம் கடவுள் பக்தி பெரிய அளவுக்கு இருக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. சங்கர மடத்தின் பெருமை, மார்க்கம்அவர்களுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் பலர் இங்கு வரத்தான் செய்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள்.
பாமர மக்களை என்றுமே சங்கரமடம் கண்டுகொள்வதில்லை என்ற புகார் உள்ளது. அப்படி புறக்கணித்த மக்கள் உள்ள கலவையில்தான்இப்போது தஞ்சம் அடைந்துள்ளார் ஜெயேந்திரர். இப்போதவது அந்த அப்பாவி மக்களுக்கு சங்கர மடம் ஏதாவது நல்லது செய்தால்,புண்ணியம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications