கலவையில் ஜெயேந்திரருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

கலவை:

Jeyandrar கலவை மடத்தில் கூலிப் படையினர் ஊடுறுவும் வாய்ப்பு இருப்பதாக வந்த தகவலையடுத்து ஜெயேந்திரருக்கும், கலவை மடத்திற்கும் சங்கரமட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயேந்திரர் கலவையில் உள்ள மடத்தில் தங்கியுள்ளார். அங்குஅவரை தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் சந்தித்து வருகின்றனர்.

இந் நிலையில் பக்தர்கள் போர்வையில் சங்கர மடத்திற்குள் கூலிப் படையினர் ஊடுறுவும் வாய்ப்பு இருப்பதாக கலவை மட நிர்வாகிகள்சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரருக்கும், கலவை மடத்திற்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த கூடுதல் பாதுகாவலர்கள் கலவை மடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஜெயேந்திரரை மிகஅருகில் சென்று சந்திக்க அனைவருக்கும் அனுமதி கொடுக்கப்படுவதில்லை. ஜெயேந்திரருக்கும், மடத்திற்கும் நன்கு தெரிந்தவர்களைமட்டுமே அருகே சென்று சந்திக்க அனுமதிக்கிறார்கள்.

இதேபோல, கலவை மடத்திற்குள் அனைவரையும் பரிசோதித்த பின்னரே அனுமதிக்கிறார்கள். கேமரா செல்போனுடன் செல்பவர்களுக்குஅனுமதி மறுக்கப்படுகிறது. அதேபோல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+