ஸ்டாலின் கூட்ட மேடை திடீர் அகற்றம்
பாலக்கோடு:
பாலக்கோட்டில் திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த பொதுக்கூட்ட மேடை திடீரென அகற்றப்பட்டது.
பாலக்கோட்டில் ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக பாலக்கோடு பேருந்து நிலையம்எதிரில் கூட்டம் நடத்த போலீஸாரிடம் திமுகவினர் அனுமதி கோரினர்.
பேருந்து நிலையத்தில் பணிகள் நடப்பதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பழைய ஸ்டேட் வங்கி எதிர்புறம் கூட்டம் நடத்த போலீஸார்அனுமதி கொடுத்தனர். அதனையடுத்து அங்கு திமுகவினர் மேடை அமைத்தனர்.
இந் நிலையில் அங்கு வந்த டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் மேடை போக்குவரத்திற்கு இடையூறாகஇருப்பதாகக் கூறி அதை அகற்றக் கூறினர். அதற்கு திமுகவினர் மறுப்பு தெரிவித்தனர்.
அதனையடுத்து பாலக்கோடு தாசில்தார் முருகேசன் மற்றும் டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ் ஆகியோர் கிராம ஊழியர்களுடன் வந்து மேடையைப்பிரித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் டி.எஸ்.பி., கிருஷ்ணராஜூடன் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோவிந்தசாமி,முன்னாள் திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் உள்ளிட்ட திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் சாலையையொட்டி பத்து அடிக்கு மேடை அமைக்கஅனுமதி வழங்கப்பட்டது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications