ஸ்ரீரங்கம் தீவிபத்து நினைவு தினம்
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆண்டு கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் பலியானதன் நினைவு தினம்இன்று அனுசரிக்கப்படுகிறது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி குருராஜன், ஜெயஸ்ரீ ஆகியோரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
இதில் கல்யாணத்தையொட்டி போடப்பட்டிருந்த பந்தல் தீப்பிடித்து அப்படியே விழுந்ததால் அதில் சிக்கி 62 பேர் பலியானார்கள்.அவர்களில் மணமகன் குருராஜனும் ஒருவர். 23 பெண்களும், 4 குழந்தைகளும் இந்த கோர தீவிபத்தில் சிக்கிக் கருகினர். 45 பேர்காயமடைந்தனர். மணமகள் ஜெயஸ்ரீ அதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார்.
தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து கல்யாண மண்டப உரிமையாளர், மேலாளர்,வீடியோகிராபர், லைட்பாய், எலக்ட்ரீஷியன், பந்தல் அமைப்பாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தீ விபத்தில் சிக்கித் தப்பிய ஜெயஸ்ரீ முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் மன நல ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்யப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். இருப்பினும் தீவிபத்து ஏற்படுத்தி விட்ட வடு மற்றும் கை நழுவிப் போன வாழ்க்கையைநினைத்து இன்னும் கூட சோகமாகவே உள்ளார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications