நிவாரண பணிகளுக்கு குழுக்களை அமைத்தார் ஜெ
சென்னை:
![]() |
சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட, ஊராட்சி அளவிலான குழுக்களை அமைத்து முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
சுனாமி நிவாரணத்துக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதியை முறையாகவும், உரிய முறையிலும் செலவிட வகை செய்யும் விதத்தில்,அனைத்ததுக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களை அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்திருந்தார்.
இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், சுனாமி நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக மாவட்ட மற்றும்ஊராட்சி அளவிலான குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்ட அறிக்கை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிவாரணப் பணிகள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன. இந்தப்பணிகளை மத்திய அரசு, உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை வெகுவாகப் பாராட்டியுள்ளன.
கடந்த 7ம் தேதி எனது தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறப்பட்ட ஆலோசனைகளையும் தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.
இந் நிலையில் மூன்றாவது கட்ட நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப்பணிகளை சிறப்பாக செய்யும் பொருட்டு மாவட்ட மற்றும் ஊராட்சி அளவிலான குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை கட்டித் தருவது, அனைத்து வாழ்வாதார உதவிகளையும் வழங்குவது இந்தமூன்றாவது கட்ட நிவாரணப் பணிகளில் உறுதி செய்யப்படும்.
அதன்படி தலைமைச் செயலாளர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம்,நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடும். இதுதவிர மாவட்ட, ஊராட்சி மற்றும் வார்டு அளவிலான ஆலோசனைக் குழுக்களும்அமைக்கப்படவுள்ளன.
மாவட்ட அளவில் அமைக்கப்படும் குழுக்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைவராக இருப்பார். இக்குழுவில் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், ஆட்சித் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனப்பிரதிநிதிகள் இடம் பெறுவர்.
ஊராட்சி அளவிலான குழுக்களில் ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மீனவர் பிரதிநிதிகள், கிராமநிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர், ஆட்சித் தலைவரால் தேர்வு செய்யப்படும் அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனப்பிரதிநிதிகள் இடம் பெறுவர்.
இக் குழுக்கள் அடிக்கடி கூடி நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவர் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?













Click it and Unblock the Notifications