சுனாமி: நாளை விடுதலைப் புலிகள் துக்கம் அனுஷ்டிப்பு
கிளிநொச்சி:
சுனாமி பேரலைகளுக்குப் பலியானவர்களின் நினைவாக நாளைய தினத்தை (ஜனவரி 26) துக்க நாளாக அனுசரிக்க விடுதலைப் புலிகள்முடிவு செய்துள்ளனர்.
வட-கிழக்கில் மட்டுமின்றி தெற்காசியாவில் பலியான அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் விதத்தில் இந்த தினத்தை அனுசரிக்கப்போவதாக புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் மக்கள் போர் காரணமாக சொல்லொணா துயரம் அனுபவித்தனர். போர் நிறுத்தம்காரணமாக கடலோரத்தில் வாழும் மீனவ தமிழர்களுக்கு மீண்டும் புனர்வாழ்வு கிடைக்க வழி பிறந்தது.
இந்த நிலையில் தான் பேரழிவு மிக்க சுனாமி அலைத் தாக்குதல் ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்பை ஏற்படுத்தியது. கடலோரப் பகுதிகளில்வசிக்கும் எங்கள் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்துள்ளனர், உறவுகளை இழந்துள்ளனர். நண்பர்கள், உறவினர்கள், முகாம்களில் தஞ்சம் புக வேண்டியநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர்.
இந்த பேரழிவில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 26ம் தேதியை துக்க தினமாக அனுஷ்டிக்கிறோம். இந்ததினத்தில் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் அனைத்திலும் நினைவு விளக்குகளை ஏற்ற வேண்டும்.
தமிழர் பகுதிகளில் கனடா உதவி:
இதற்கிடையே மட்டக்களப்புக்கு அருகே உள்ள பாண்டிருப்பு பகுதியில் கனடா நாட்டு ராணுவம் மருத்துவ முகாம் அமைத்து சுனாமியால்பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் பாதிாக்கப்பட்ட சில பகுதிகளில் நீர் சுத்திகரிப்புக் கருவிகளைக் கொண்டு குடிநீரை சுத்தப்படுத்தி சுகாதாரமான நீரை வினியோகம்செய்யும் பணியிலும் கனடா ராணுவம் ஈடுபட்டுள்ளது.
இலங்கை அரசு உதவவில்லை:
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளுக்கு இலங்கை அரசு போதிய உதவிகளைச் செய்யாமல் கண்டும் காணாமல் இருந்து வருகிறது.
வட-கிழக்கைச் சேர்ந்தவர்கள் நிவாரண உதவி கோரிச் செல்லும்போது பல பக்க விண்ணப்பங்களைக் கொடுத்து அங்கும், இங்கும் அலையவிட்டு வேடிக்கை பார்த்து வருகின்றனர் இலங்கை அரசு அதிகாரிகள்.
சுனாமியைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த நிதி உதவியில் வட-கிழக்குப் பகுதி மக்களுக்கு உரிய பங்கு போய்ச் சேரவே இல்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications