ஆந்திராவில் மறிக்கப்பட்ட சென்னை-பெங்களூர் ரயில்
சென்னை:
தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதால், சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்ஆந்திர மாநிலம் பங்காருப்பேட்டை ரயில் நிலையத்துடன் நிறுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஆனந்தப்பூரில் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. ரவி மர்ம நபர்களால் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும்படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் பெரும் வன்முறையில் இறங்கினர். இன்று பந்த்தும்நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வன்முறை மற்றும் பந்த் காரணமாக தமிழகத்திலிருந்து ஆந்திரா வழியாக ரயில் மற்றும் பஸ் போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற லால் பாக் எக்ஸ்பிரஸ் ரயிலை தெலுங்கு தேசம் தொண்டர்கள்பங்காருப்பேட்டை ரயில் நிலையத்தில் மறித்தனர். இதனால் அந்த ரயில் பங்காருப்பேட்டையுடன் நிறுத்தப்பட்டது.
இதேபோல, குப்பம் ரயில் நிலையத்திலும் சில ரயில்கள் நிறுத்தப்பட்டன. பஸ் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திலிருந்து ஒரு பஸ் கூட ஆந்திர மாநிலம் செல்லவில்லை. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து திருப்பதி உள்ளிட்டஊர்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் ஓடவில்லை.
அதேபோல, சென்னையிலிருந்து செல்லும் ஆந்திர மாநில பேருந்துகளும் ஓடாமல் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து செல்லும் பஸ்கள்திருத்தணி வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications