தமிழகத்தில் எளிமையான குடியரசு தினம்
சென்னை:
![]() |
சென்னை மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகே ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா தேசியக் கொடியேற்றி வைத்து முப்படையினர்,காவல்துறையினர், என்.சி.சி., சாரணர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் ஜெயலலிதா அண்ணா வீர பதக்கம், காந்தி விருது, கோட்டை அமீர் விருது ஆகியவற்றை வழங்கினார்.
திருட்டு மணல் கடத்தலைத் தடுக்க முயன்றபோது லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட 3 தாசில்தார்களுக்கும் வீர தீரச் செயலுக்கான அண்ணா வீரப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. கொல்லப்பட்ட தாசில்தார்களின் குடும்பத்தினரிடம் அண்ணா தங்கப் பதக்கம், ரூ. 10,000 ரொக்கப் பரிசுஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார்.
![]() |
அதே போல திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி தாசில்தாராகப் பணியாற்றி மணல் திருட்டைத் தடுக்க முயன்று லாரி ஏறியதால், இருகால்களும் நசுக்கப்பட்டு, சக்கர நாற்காலியுடன் பணியாற்றி வரும் நடராஜனுக்கும் அண்ணா வீரப் பதக்கத்தை ஜெயலலிதா வழங்கினார்.
மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது பழனியைச் சேர்ந்த ஷாகுல் ஹமீதுக்கு வழங்கப்பட்டது.
கள்ளச் சாராயத்தை ஒழித்த செங்கை கிழக்கு மாவட்ட கூடுதல் எஸ்பி செந்தில்குமாரி, விழுப்புரம் கூடுதல் எஸ்பி லட்சுமி, கோவை டிஎஸ்பிநந்தகுமார், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் சுசில்குமார் ஆகியோருக்கு மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.
![]() |
ஜெயலலிதா, ஆளுநர் பங்கேற்ற விழா 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. இதே போல மாநிலம் முழுவதும் நடந்த எளிமையானவிழாக்களில் மாவட்டத் தலைநகர்களில் ஆட்சித் தலைவர்கள் தேசியக் கொடியேற்றி வைத்தனர்.
குடியரசு தின விழாவையொட்டி தமிழகம் முழுவதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்















Click it and Unblock the Notifications