கமல், சூர்யாவுக்கு ராமதாஸ்-திருமா கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பை எக்ஸ்பிரஸ், பெஸ்ட் பிரண்ட் ஆகிய படங்களின் பெயர்களை தமிழில் மாற்றாவிட்டால் தமிழகத்தில் எங்குமே அந்தப் படங்களைத்திரையிட முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் ஆகியோர்மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்ப் பாதுகாப்புஇயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சிக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் இயக்கத்தின் தலைவர்திருமாவளவன், காப்பாளர் ராமதாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

1938ம் ஆண்டு தமிழைக் காத்திட நடந்த மொழிப் போரில் உயிர் நீத்த நடராஜன், தாளமுத்து, 1965ல் நடந்த மொழிப் போரில் உயிர் நீத்தமொழிப் போர் தியாகிகளுக்கு தமிழ் பாதுகாப்பு இயக்கம் வீர வணக்கத்தை செலுத்துகிறது.

பெயர் மற்றும் விளம்பரப் பலகைகளில் தமிழ், கடவுள் வழிபாடுகளில் தமிழ், பயிற்று மொழி மற்றும் பாட மொழியாகத் தமிழ், திருமணநடைமுறைகளில் தமிழர் மரபு, நீதிமன்றங்களில் தமிழ், ஆட்சி மொழியாகத் தமிழ், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் தமிழ், செய்தி பத்திரிக்கைகளில்தமிழ், தமிழ் திரைப்படத் தணிக்கைகளில் தமிழ்ப் பண்பாட்டு பாதுகாப்பு என 10 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நவம்பர் 2ம் தேதிமுதல் டிசம்பர் 20ம் தேதி வரை சென்னையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

எனினும், திரையுலகினர், வணிகர்கள் மற்றும் தமிழக அரசு ஆகியோர் இந்தக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அக்கறைகாட்டவில்லை.

இவற்றை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக அரசை வலியுறுத்தியும், மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், சென்னை,கோவை, நாகை, குமரி ஆகிய மையங்களில் தொடங்கி திருச்சியை நோக்கி தமிழ் தேசிய ஊர்தி பயணம் மேற்கொள்ளப்படும்.

உலக மகளிர் நாளான மார்ச் 8ம் தேதி தொடங்கி தாளமுத்துவின் வீர வணக்க நாளான மார்ச் 12ம் தேதி நிறைவு பெறும். அன்று இரவுதிருச்சியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப்படும். அக் கூட்டத்தில் தமிழைக் காக்க மூன்றாவது மொழிப் போர் அறிவிக்கப்படும்.

நாகையிலிருந்து தொடங்கும் பயணத்துக்கு திருமாவளவனும், சென்னையிலிருந்து ராமதாஸும், குமரியிலிருந்து டாக்டர் சேதுராமனும்,கோவையிலிருந்து பழ. நெடுமாறனும் தலைமையேற்று வருவார்கள்.

தங்களது படத்தின் பெயரை தமிழில் மாற்றுமாறு கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யாவுக்கு அறிவுரை கூறியும், ஆங்கிலப் பெயர்களையேசூட்டுவோம் என தொடர்ந்து அறிவிப்புச் செய்வது தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாகும்.

கமல்ஹாசன், சூர்யாவின் தமிழ் விரோதப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். அத்தோடு மும்பை எக்ஸ்பிரஸ், பெஸ்ட் பிரண்ட் ஆகியபடங்களின் பெயர்களை தமிழில் மாற்ற வேண்டும். இதன் பின்னரும் எங்களது வேண்டுகோளை மீறினால், அந்த திரைப்படங்களைதமிழகத்தில் எங்கும் திரையிட முடியாது என தமிழ் பாதுகாப்பு இயக்கம் கடுமையாக எச்சரிக்கிறது.

படங்களின் தயாரிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோருக்கு இதனை எச்சரிக்கையாக முன்கூட்டியே தமிழ் பாதுகாப்பு இயக்கம் அறிவிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+