பெங்களூர் தமிழ் சங்கத்தில் நவீன சுயம்வரம்
பெங்களூர்:
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நவீன சுயம்வரத்தில் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேடி நூற்றுக்கணக்கானஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
பெங்களூர் தமிழ்ச் சங்கம் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு தமிழ், யோகா, நாடகம்,நாட்டியம், வாய்ப்பாட்டு ஆகியவை கற்றுத்தரப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நவீன சுயம்வரத்தையும் நடத்திவருகின்றனர்.
இந்த நவீன சுயம்வரம் மூலம் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடந்துள்ளன. இந் நிலையில் தமிழ்ச் சங்கத்தின் 23வது சுயம்வரம்நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பெங்களூர், மைசூர், ஷிமோகா, கோலார் உள்ளிட்ட கர்நாடகப் பகுதிகளில் இருந்தும், சென்னை, வேலூர், திருச்சி, கோவைஉள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், துபாய், குவைத், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானதமிழர்கள் கலந்து கொண்டனர்.
சாப்ட்வேர் என்ஜினியர்கள், டாக்டர்கள், பட்டதாரிகள், வியாபாரிகள் என பலதரப்பட்டவர்களும் தங்களது வாழ்க்கைத்துணையைத் தேடி மேடை ஏறினர். பெரும்பாலானவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து மேடையேறி தங்களுக்குப் பிடித்தமணமகனையும், மணமகளையும் தேர்வு செய்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் இளவழகன் பேசுகையில், உலகோடு ஒட்டி வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும். நில நடுக்கம், சுனாமிபோன்ற பெருங்கேடுகள் எப்போதும் வேண்டுமானாலும் நேரலாம். ஆதலால் வாழ்கின்ற காலம் வரை மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
இல்வாழ்க்கையின் பெருமையை வள்ளுவர் குறளில் விளக்கியுள்ளார். அத்தகைய வாழ்க்கை அமைய இங்கே வந்திருக்கிறீர்கள்.உங்களுடைய தேவைக்காக தமிழ்ச் சங்கம் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை எல்லோரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications