சங்கரராமன் கொலை: சிபிஐயின் ரகசிய விசாரணை!
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ ரகசிய விசாரணை நடத்தி முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொலை வழக்கில் கடந்த 21ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது தமிழக காவல்துறை. ஜெயேந்திரர்,விஜயேந்திரர் உள்ளிட்ட 24 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரவி சுப்பிரமணியம் அப்ரூவர்ஆகியுள்ளார்.
இந்த வழக்கு தவிர ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதவிரதிருக்கோஷ்டியூர் மாதவன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் கைது செய்யப்படக் கூடும் என்ற தகவல் வருகிறது.
இந் நிலையில் ஜெயேந்திரரை குறி வைத்து பழி வாங்கும் நோக்கில் அவர் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு வருகிறதுதமிழக அரசு என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. ஆகியவை குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக பிரதமரிடமும்இவை புகார் கொடுத்துள்ளன. ஜெயேந்திரர் மீதான வழக்குகளை தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு மாற்றவும் கோரிக்கைவலுத்து வருகிறது.
இந் நிலையில் சிபிஐ ரகசிமாக களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கலவைக்கு வந்த சிபிஐ அதிகாகள் குழு அங்குஜெயேந்திரரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சங்கரராமன் கொலை குறித்துஜெயேந்திரரிடம் அவர்கள் விசாரணை நடத்தியுள்ளதாக தற்போது தெரிய வருகிறது.
இதேபோல காஞ்சிபுரத்திற்கும் சிபிஐ அதிகாரிகள் குழு வந்துள்ளது. அங்கு தமிழக போலீஸார் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுகடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தியுள்ளது இக் குழு. சங்கரராமன் வழக்கு, சங்கர மடம் மீதான புகார்கள் என அனைத்துவிவகாரங்கள் குறித்தும் இக் குழுவினர் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.
வழக்கை தமிழக போலீஸார் கையாளும் விதம், மடத்தின் மீது கூறப்படும் பாலியல் புகார்கள் என்பது குறித்தும் அவர்கள்விசாரணை நடத்தியுள்ளனர்.
இன்று டெல்லி திரும்பிய இக் குழு ஜெயேந்திரர் மீதான புகார்கள் வலுவானவையா, உண்மையானவையா என்பது குறித்து மத்தியஅரசிடம் ரகசிய அறிக்கை தரும் என்று தெரிகிறது.
சிபிஐயின் இந்த ரகசிய விசாரணை தமிழக அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. ஜெயேந்திரர்மீதான வழக்குகளை மத்திய அரசு சிபிஐக்கு மாற்றுவதற்கான முன்னொட்டமாகவே இந்த ரகசிய விசாரணையை தமிழககாவல்துறை பார்க்கிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications