அரசு அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்
விழுப்புரம்:
விழுப்புரத்தில் மின்வாரிய தலைமைப் பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினரை போலீஸார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களில் மின்துறையில் வீணான பழைய கம்பங்கள், காப்பர், அலுமினியம்,செயல்படாத வாகனங்கள் மற்றும் பழைய இரும்பு பொருட்களை ஏலம் விட டெண்டர் கோரப்பட்டிருந்தது.
இதற்கான விண்ணப்பங்களை நேற்று மதியம் 2 மணிக்குள் விழுப்புரம் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் நேற்று மதியம் 2.30 மணிக்கு 15 அதிமுகவினர் மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். தங்களதுடெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மிரட்டினர்.
நேரம் முடிவடைந்துவிட்டதால் டெண்டரை வாங்க முடியாது என்று தலைமைப் பொறியாளர் கூறினார். இதனால் கோபமடைந்தஅதிமுகவினர், மேஜை மேல் இருந்த பொருட்களை எடுத்து தலைமைப் பொறியாளர் மீது வீசினர்.
பின்னர் அலுவலகத்தில் இருந்த நாற்காலி, மேஜை மற்றும் தொலைபேசியை அடித்து நொறுக்கினர். இதனால் அலுவலக ஊழியர்கள்அலறியடித்துக் கொண்டு வெளியேறினார். பின்னர் அந்தக் கும்பல் அலுவலகத்தை விட்டு வெளியேறி தாங்கள் வந்த டாடா சுமோவில் ஏறிதப்பிவிட்டது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications