புதுவை கடலில் ஒளி தெரிந்ததா? மக்கள் பீதி!

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரி அருகே கடலில் தெரிந்த பிரகாசமான ஒளியால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

டிசம்பர் 26ம் தேதி சுனாமி பேரலைகள் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கியதிலிருந்து கடலில் வித்தியாசமாகஎதைப் பார்த்தாலும் சுனாமி வருமோ என்ற பீதியில் மக்கள் முழ்குகிறார்கள்.

இந் நிலையில் புதுவை அருகே கடலில் பிரகாசமாக ஒளி தெரிந்ததாக தகவல் பரவியுள்ளதால் மக்களிடையேஅச்சம் பரவியிருக்கிறது.

பாண்டிச்சேரியை ஒட்டியுள்ளது பிள்ளைச்சாவடி கிராமம். இது தமிழகத்திற்குள் உள்ளது. கடலோர கிராமமானஇப்பகுதியைச் சேர்ந்த சிலர் கடற்கரை மண்ணில் அமர்ந்திருந்தபோது திடீரென கடலில் பிரகாசமாக ஒளிதெரிந்தாகவும் பயந்து போன அவர்கள் ஊருக்குள் திரும்பி ஓடி வந்து அதைத் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது.

இதைக் கேட்டு கிராமமே திரண்டு கடற்கரைக்கு ஓட, பிரகாசமான ஒளி தொடர்ந்து தெரிந்துள்ளது. சிலர் கடல் நீர்சுழல்வது போல இருப்பதாகவும் கூறிவிட மேலும் பயம் பரவியுள்ளது.

இந் நிலையில் ராமச்சந்திரன் என்ற மீனவர், கடலுக்குள் போய் தான் பார்த்துவிடுகிறேன் என்று கூறிக் கொண்டுகடலில் குதித்துள்ளார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் அவருக்கும் பயம் ஏற்பட்டு அலறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து படகுகளில் சென்ற பிற மீனவர்கள் அவரை மீட்டு வந்தனர். கரைக்கு வந்ததும் அவர் மயங்கிவிழ, சிறிது நேரத்தில் ராஜம்மாள் என்ற பெண்ணும் மயங்கியுள்ளார்.

இப்படி அடுக்கடுக்காய் தொடர் விசித்திர சம்பவங்களை அந்த கிராம மக்கள் நம்மிடம் சொன்னபோதுஅதையெல்லாம் நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் தான் கடைசியில் மிஞ்சியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+