ரூ. 5 லட்சம் தராததால் என் மீது பொய் வழக்கு: டாக்டர் பிரகாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்டார். அதைக் கொடுக்காததத் என் மீது செக்ஸ் புகார் வழக்குப்போடப்பட்டது என்று இன்டர்நெட்டில் பெண்களின் ஆபாசப் படங்கள், வீடியோவை விற்று வந்த டாக்டர் பிரகாஷ் வாக்குமூலம்அளித்துள்ளார்.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் விற்று வந்தார்.பின்னர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், ஹெராயின் வைத்திருந்ததாகவும் பிரகாஷ் மீது வழக்குப் போடப்பட்டது.

இப்போது சிறையில் இருக்கும் பிரகாஷ் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இன்று நீதிபதி நசீர் அகமது முன் ஆஜர் செய்யப்பட்டார்.

பின்னர் இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313பிரிவின் கீழ் டாக்டர் பிரகாஷ் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று என்னை போலீஸார் கைது செய்தனர். 6 நாள் போலீஸ் காவலில் எடுத்தனர்.

ஆனால் 5 நாட்கள் வரை விசாரணையே நடைபெறவில்லை. 6வது நாள் ஒரு போலீஸ் உயர் அதிகாரி என்னிடம் வந்தார். ரூ. 10 லட்சம்கொடுத்தால் வழக்கை இல்லாமல் செய்து விடலாம் என்றார். ஆனால் நான் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

பின்னர்ரூ. 5 லட்சம் கொடுக்குமாறு கேட்டார். ஆனால் ரூ. 2 லட்சம் தருவதாக எனது வழக்கறிஞர் கூறினார். அதை போலீஸார்ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து என் மீது போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி வழக்குத் தொடர்ந்தனர். போலீஸார் என்னிடம் வாங்கியுள்ளவாக்குமூலம் என்னைக் கட்டாயப்படுத்தி வாங்கப்பட்டது. இதை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்று பிரகாஷ் கூறினார்.

இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரகாஷின் வீடியோவில் டிவியில் வலம் வரும் பூனைக்கண் நடிகை, நர்ஸ்கள், கல்லூரி மாணவிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+