பெண் கொலை: பிணம் தலைகீழாக புதைப்பு
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரயில்வே ஊழியர் ஒருவரின் மகள் கொலை செய்தவர்கள் அவரது பிணத்தை தலைகீழாகபுதைத்திருந்தனர். கால்கள் தரைக்கு மேலே நீட்டியபடி இருந்தன.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் உள்ள நெய்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் தஞ்சாவூர்ரயில்வேயில் பணிபுரிகிறார். இவருக்கு 3 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் மூத்த பெண்குணசுந்தரியை (16) கடந்த வியாழக்கிழமை முதல் காணவில்லை.
இந் நிலையில் தஞ்சாவூர் அருகே திட்டை ரயில்வே பாலத்திலிருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் தண்டவாளம் அருகே ஒருகுழியில் மனித கால்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த நெய்தலூர் கிராம நிர்வாக அதிகாரி அன்பழகன் மெலட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸார் விரைந்து வந்து பிணத்தை தோண்டியெடுத்தனர். அது குணசுந்தரியின் உடல் என்பது உறுதியானது.
குணசுந்தரியின் கால்களை கயிற்றால் கட்டி, பிணத்தை தலைகீழாகப் புதைத்திருந்தனர். சுடிதார் அணிந்திருந்த அந்தப்பெண்ணின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன.
காதல் விவகாரம் காரணமாக இவர் கொலை செய்யப்பட்டதாக போலீஸார் கருதுகின்றனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications