அமெரிக்க நெருக்கடி: விற்கப்படும் அல் ஜசீரா!!!
நியூயார்க்:
அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக அல் ஜசீரா தொலைக்காட்சியை விற்க கத்தார் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
வளைகுடா நாட்டின் சிஎன்என் என்று அழைக்கப்படும் அல் ஜசீரா, ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் விவகாரங்களில் அமெரிக்கத்தொலைக்காட்சிகளை மிஞ்சி செய்திகளைத் தந்து வருகிறது. அரேபிய நாடுகளின் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டஇந்தத் தொலைக்காட்சியின் பரபரப்பான செய்திகளால் அமெரிக்காவுக்கு தொல்லையே மிஞ்சி வருகிறது.
இந்தத் தொலைக் காட்சியில் கத்தார் அரசு தான் பெரும் முதலீடு செய்துள்ளது. சமீபத்திய இராக் போரைத் தொடர்ந்து அல் ஜசீரா,அமெரிக்காவின் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.
இந்தத் தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு தொழில்நுட்ப இடையூறுகள் செய்தும் வருகிறது அமெரிக்கா. அதே நேரத்தில் இந்த டிவியின்கதையை முடிக்க கத்தார் அரசுக்கும் கடும் நெருக்கடி தந்து வருகிறது அமெரிக்கா.
இதையடுத்து இதை கைகழுவி விட கத்தார் அரசு முடிவு செய்துவிட்டது. இது குறித்து நியூயார்க் டைம்சுக்கு கத்தார் அதிகாரி ஒருவர்தந்துள்ள பேட்டியில்,
அல் ஜசீரா நிர்வாக-ஆசிரியர் குழுவில் அண்மையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டிவி நிறுவனத்தை விற்பது தொடர்பானவழிமுறைகளைக் கண்டறியும் பணி இந்த புதிய உறுப்பினர்களில் சிலரிடம் தரப்பட்டுள்ளது.
அமெரிக்கா மட்டுமல்ல, விளம்பரதாரர்களாலும், மற்ற நாட்டவர்களாலும் எங்களுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டு வருகிறது என்றுகூறியுள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சி காரணமாக அமெரிக்காவுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த முடிவுக்கு கத்தார் வந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிக் செனி, பாதுகாப்பு அமைச்சர் காண்டலீஸ்ஸா ரைஸ், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் காலின் பாவல், பாதுகாப்புசெயலர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் மற்றும் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் கத்தார் அரசிடம்,
அல் ஜஸீரா தொலைக்காட்சி மக்களைத் திசை திருப்பும் வகையில் தவறான செய்திகளை குறிப்பாக இராக் பற்றிய செய்திகளைவெளியிடுவதாக புகார் தெரிவித்து வருகின்றனர் என நியூயார்க் டைமஸ் கூறுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications