ஜெயேந்திரர்: பேட்டியில்லை.. ஆசி மட்டும்!
கலவை:
கலவைக்குச் சென்ற திமுக முன்னாள் எம்.பி. ஆதிசங்கர் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெறாமல் வருத்தத்துடன் திரும்பினார்.
கலவையில் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெற கடலூர் முன்னாள் திமுக எம்.பி. ஆதிசங்கர் வந்தார். சுமார் ஒன்றரை மணிநேரம்காத்திருந்தும் ஜெயேந்திரரை சந்திக்காம திரும்பினார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், சட்டையை கழற்றி விட்டு ஜெயேந்திரரைச் சந்தித்து ஆசி பெறும்படி என்னிடம் மடத்தின்நிர்வாகிகள் கூறினார்கள். ஆனால் சட்டையைக் கழற்ற எனக்கு விருப்பமில்லை. அதனால் ஆசி பெறாமல் திரும்பி விட்டேன் என்றார்.
நிருபர்களுக்கு ஆசி:
இதற்கிடையே கலவை மடத்திற்கு ஜெயேந்திரர் வந்ததிலிருந்து அவரைச் சந்திக்க நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டு வருகிறது.
நிருபர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக நேற்று ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி தரப்பட்டது. எப்படியாவது அவரிடம் கேள்விகள்கேட்டு பதில் பெற்றுவிடலாம் என்ற ஆசையில் நிருபர்கள் உள்ளே ஓடினர்.
ஆனால், ஜெயேந்திரர் பேட்டி ஏதும் தரவில்லை. ஆசி மட்டுமே தந்தார்.
ஜெயேந்திரரைக் காண உள்ளே சென்றபோது நிருபர்களின் செல்போன், நோட் புக் ஆகியவை அனுமதிக்கப்படவில்லை.
சமீபத்தில் ஒரு இந்தி பத்திரிக்கையின் பெண் நிருபர் தனது செல்போன் கேமராவால் ஜெயேந்திரரை கலவை மடத்தில் படம் பிடித்துப்போட்டுவிட்டார். இதனால் இந்த முன் எச்சரிக்கையாம்.
பேட்டி ஏதும் தராமல், சிரித்தபடியே ஆசி தந்து நிருபர்கள், புகைப்படக்காரர்களை ஜெயேந்திரர் திருப்பி அனுப்பி வைக்க ஏமாற்றத்துடன்திரும்பி வந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications