ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் விஜயேந்திரர் அப்பீல்!
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி விஜயேந்திரர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஜயேந்திரர் சார்பில் செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை செங்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
10ம் தேதி குற்றப் பத்திரிக்கை:
இந் நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 25 பேருக்கும் வரும் 10ம் தேதி குற்றப் பத்திரிக்கைநகல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
சுமார் 1,700 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிக்கையின் நகல் எடுக்கும் பணி தனிப்படை போலீஸ் பங்களாவில் நடந்து வருவதாகஎஸ்பி பிரேம் குமார் பேட்டியளித்தார்.
போலீஸ் டூ நீதிமன்றம்:
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குற்றப் பத்திரிக்கை நகல் எடுக்கும் பணி நீதிமன்றத்தினுடையது. இதில் போலீசார் தலையிடுவதே தவறுஎன்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த நகல் எடுக்கும் பணி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான பக்கங்களை நகல் எடுக்கும் பணியில் 10 நீதிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications