பிரதமரிடம் வழங்கப்பட்ட சன் டிவி சுனாமி நிதி
டெல்லி
சன் டிவி சார்பில் திரட்டப்பட்ட சுனாமி நிவாரண நிதி ரூ. 5.5 கோடி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இன்று வழங்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்த சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநதி மாறன் இதற்கான காசோலையைவழங்கினார்.
சன் டிவிக்கு நேயர்கள் அளித்த ரூ. 4.5 கோடி மற்றும் தனது தனிப்பட்ட நிதியுதவியாக ரூ. 1 கோடி என மொத்தம் ரூ. 5.5 கோடி நிதியைகலாநிதி வழங்கினார்.
இந் நிகழ்ச்சியின்போது மத்திய அமைச்சரும் கலாநிதியின் தம்பியுமான தயாநிதி மாறன், கலாநதி மாறனின் மனைவி காவேரி ஆகியோர்உடனிருந்தனர்.
இந்த நிதியிலிருந்து ரூ. 4 கோடியை தமிழக சுனாமி நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்குமாறு பிரதமரை கலாநிதி கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் மத்திய குழு ஆய்வு:
தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு வருகின்றனர்.
தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் அந்தமான் தீவுகளில் சுனாமியால் பாதித்த பகுதிகளைப் பார்வையிட மாநிலங்களவைத் துணைத் தலைவர்ரகுமான்கான் தலைமையில் நான்கு எம்.பிக்கள் கொண்ட குழு நேற்று சென்னை வந்தது .
இக் குழுவினர் இன்று கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோரப் பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் நாகை மற்றும் காரைக்கால்
பகுதிகளுக்குச் சென்றனர்.
இக்குழுவினர் நாளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சுனாமி தாக்கிய பகுதிகளைப் பார்வையிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் உலக வங்கியின் தொழில்நுட்ப குழுவினரும் (12 பேர்) கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளைபார்வையிட்டனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications