வீராணம்: திட்ட அறிக்கை கேட்கிறது நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஏற்பது குறித்து முடிவு செய்ய, அத் திட்டத்தின்தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கீழக்குடியிருப்பைச் சேர்ந்த ராமாமிர்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

பெரம்பலூர், தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள் சார்பில் இந்த மனுவை நான்தாக்கல் செய்கிறேன். புதிய வீராணம் விரிவாக்கம் திட்டம், வீராணம் ஏரி வற்றும்போது பயன்படுத்தப்படும் என்று அரசுகூறியுள்ளது. ஆனால் வீராணம் ஏரி பெரும்பாலும் வற்றிய நிலையில் தான் இருக்கும்.

எனவே புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம் என்பது நிரந்தரத் திட்டம்தான். தேவைக்கு பயன்படுத்தும் திட்டம் அல்ல. இத்திட்டத்தின் மூலம் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறையும். குடிநீர் மற்றும் விவசாயப் பணிகளில் பாதிப்பு ஏற்படும்.

இத்திட்டத்திற்காக ரூ.300 கோடி செலவிடுவது வீணாகும். இந்தப் பணத்தை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டபயன்படுத்தலாம். கொள்ளிடம் ஆற்றின் மேல் மற்றும் கீழ் அணைக்கட்டு பகுதிகளில் 7 இடங்களில் அணைகட்ட வாய்ப்புஉள்ளது.

7 அணைக்கட்டுகளிலும் 14 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். இதனால் நிலத்தடி நீட்மட்டம் உயரும். மேலும் ஒருஅணைக்கட்டுக்கு அதிகபட்சமாக ரூ.40 கோடி என்றாலும் மொத்தம் 280 கோடி ரூபாய்தான் தேவைப்படும். இதன் மூலம் மின்சாரஉற்பத்தியும் செய்யலாம்.

எனவே புதிய வீராணம் விரிவாக்கத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். வழக்கு முடியும் வரை திட்டத்தை செயல்படுத்த தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கற்பகவிநாயகம், நீதிபதி ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் அட்வகேட் ஜெனரல் சந்திரன் வாதாடினார். பின்னர் டிவிஷன் பெஞ்ச் தனது இடைக்காலஉத்தரவில்,

புதிய வீராணம் விரிவாக்கத் திட்டம், வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாதபோது மட்டும்தான் அமல்படுத்தப்படும் என்றும்,திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழக்கப்பட்டு விட்டதாகவும், எனவே இந்த மனுவை ஏற்கக்கூடாது என்றும் அட்வகேட் ஜெனரல்கூறினார்.

இந்தத் திட்டம் அரசின் கொள்கை முடிவு என்றும் தனி நபர் தாக்கல் செய்த பொது நல வழக்கின் மூலம் அரசின் கொள்கை முடிவில்தலையிட முடியாது என்றும் அவர் கூறினார்.

எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்ய இந்தத் திட்டம் குறித்த தற்போதைய நிலையைஅறிக்கையாக மனுவோடு சேர்த்து தாக்கல் செய்யுமாறு அட்வகேட் ஜெனரலுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மேலும் இந்த மனுமீதான விசாரணை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+