சுனாமி: நல்லெண்ண தூதராக விவேக் ஓபராய்!
டெல்லி:
ஜோர்டானில் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் இளைஞர்கள் அமைதி மாநாட்டில் இந்தியாவின் நல்லெண்ணத் தூதராகக் கலந்து கொள்ளநடிகர் விவேக் ஓபராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவேக் ஓபராய் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த சிறப்பு அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உலக மதத் தலைவர்கள் அமைப்பின் தலைவரும், முன்னாள் வி.எச்.பி. தலைவருமான பி.கே. மோடி நிருபர்களிடம்கூறியதாவது:
அமைதியான உலகத்தை ஏற்படுத்துவதற்கான தீர்வுகளை முன்வைக்கும் இளைஞர்களுக்கு ஒரு சர்வதேச அடித்தளத்தை வழங்குவதே உலகஇளைஞர்கள் மாநாட்டின் நோக்கமாகும். இதில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு விவேக் ஓபராய் தலைமைவகிப்பார்.
மத விவகாரங்களில் இந்தியா உலக நாடுகளுக்குத் தலைமைப் பொறுப்பை வகிக்க விரும்பினால், அது தேர்ந்தெடுக்க வேண்டிய பாதைபுத்தரின் பாதையாகும். அதனால்தான் சங் பரிவார் அமைப்புகளில் இருந்து நான் விலகினேன்.
நான் இப்போது வி.எச்.பி. சர்வதேச அமைப்பின் தலைவராக இருக்கிறேன். இந்துக்கள் உட்பட அனைத்து மதங்களுக்கும் ஆதரவானவனாகஇருக்க விரும்புகிறேன். முஸ்லீம்களுக்கு எதிராகவோ, கிறித்தவர்களுக்கு எதிராகவோ செயல்பட விரும்பவில்லை.
சாதி ஒழிப்பு, மத நிறுவனங்களில் அரசின் தலையீட்டை ஒழிப்பது மற்றும் மத நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிப்பது ஆகியவிஷயங்களுக்காக வி.எச்.பியுடன் இணைந்து பணியாற்றுவேன்.
முன்னாள் வி.எச்.பி. உறுப்பினர்களின் அறங்காவலர் குழுவிலும் தொடர்ந்து பதவி வகிப்பேன் என்றார்.
தொழிலதிபரான மோடி அண்மையில் மகா போதி அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications