தயாநிதி ஒரு அரைவேக்காடு: வளர்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுனாமி நிவாரணப் பணிகளை திமுக தலைவர் கருணாநிதி அரசியலாக்குகிறார் என்றும், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஒரு அரசியல்அரைவேக்காடு என்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி சட்டமன்றத்தில் கூறியதால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

வளர்மதிக்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் கோஷம் போட்டதால் அவையில் அமளி ஏற்பட்டது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு வளர்மதி பேசுகையில்,

திமுக கட்சியைச் சேர்ந்தவர்களே அரசிடம் இருந்து சுனாமி நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, கருணாநிதி நிவாரணப்பணிகளை அரசியலாக்குகிறார். அரசியல் கத்துக்குட்டியான தயாநிதி மாறன் இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.இதன்மூலம் அவர் ஒரு அரசியல் அரைவேக்காடு என்பது உறுதியாகிவிட்டது என்றார்.

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வளர்மதியின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலர் வளர்மதிக்கு ஆதரவாகப் பேசினர். திமுகவினரைப் பற்றி வளர்மதி தவறாக எதுவும்கூறவில்லை, மீனவ குடியிருப்புகளில் இருக்கும் திமுவினர் கூட அரசின் உதவியை எதிர்பார்த்திருக்கின்றனர் என்றுதான் கூறினார் என்றனர்அதிமுக எம்எல்ஏக்கள்.

திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன்:

உண்மையாகவே பாதிக்கப்பட்ட திமுகவினர் நிவாரணத்தை எதிர்பார்ப்பது பாவமா? சுனாமி நிவாரணப் பணிகளை கருணாநிதிஅரசியலாக்குகிறார் என்று வளர்மதி கூறுகிறார். ஆனால் கருணாநிதி ரூ.21 லட்சம் நிதியை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளாரேஎன்றார்.

(அப்போது குறுக்கிட்ட) முதல்வர் ஜெயலலிதா:

கருணாநிதி முதலில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார். அதனால் அவருக்கு மாநில மக்கள் மீது அக்கறையில்லை என்றுபொது மக்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. அதன் பின்பே முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் நிதியுதவி அளித்தார்.

சன் டி.வி. நிறுவனமும் தமிழக மக்கள் மீது அக்கறையின்றி பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.5.5 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது. எனக்கு வேறுபல நிகழ்ச்சிகள் இருந்த தினத்தில் என்னைச் சந்தித்து, நிதியளிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தினர் கோரினர்.

முன்னர் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை மாற்ற முடியாத காரணத்தால் தலைமைச் செயலாளரிடம் நிதியை வழங்குமாறு நான் கூறினேன்.

அவர்கள் தலைமைச் செயலாளரைச் சந்திக்க விருப்பமில்லையென்றால், தபால் மூலம் நிதியை அனுப்பியிருக்கலாம். ஆனால் அவர்களுக்குமாநில மக்கள் மீது அக்கறை இல்லாத காரணத்தால், பிரதமர் நிவாரண நிதியில் தங்கள் நிதியைச் சேர்த்தனர்.

துரைமுருகன்:

பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சன் டிவி நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் காசோலையை அளிக்கும் போது, அதில் ரூ.4.5 கோடியை

தமிழக நிவாரணப்பணிகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஜெயலலிதா:

அந்த ரூ.4.5 கோடி பணத்தை தமிழக அரசு பெறும் என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது. அது அந்தமானுக்குப் போகும், புதுவைக்குப்போகும்.

துரைமுருகன்: அது எங்கே போனாலும் இங்கேயும் வரும். அந்த நிதி தமிழகத்திற்கு வந்து சேருவதை திமுக கண்காணிக்கும். நிவாரணப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா:

அப்படியானால் தமிழகத்தில் நிவாரணப் பணியே நடைபெறவில்லை என்று மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறனும், ராஜாவும் ஏன்ஆளுநரிடம் புகார் கூற வேண்டும்? இது கட்சித் தலைவர் ஆணைக்கு அவர்கள் கட்டுப்படவில்லை என்பதைக் காட்டுகிறதா?அப்படியானால் அவர்கள் மீது கட்சி எடுத்த நடவடிக்கை என்ன?

துரைமுருகன்:

மத்திய நெடுஞ்சாலைத் துறை திட்டப் பணிகள் தொடர்பான விளம்பரங்களில் கருணாநிதி படத்தை போட்டது ஏன் என்று கேட்கிறதுஅதிமுக. தனது படத்தை போடக் கூடாது என பிரதமர் சொல்லிவிட்டதால் தலைவர் படம் போட்டோம். இங்கே படம் போடாவிட்டால்வேலையே நடக்காது.

ஜெயலலிதா:

தனது படத்தை போட வேண்டாம் என்று பிரதமர் சொன்னார் என்கிறீர்கள். கருணாநிதி படத்தை போடச் சொன்னாரா?

துரைமுருகன்: கலைஞர் படத்தை போட வேண்டாம் என்று அவர் சொல்லவில்லையே. அதனால் தான் போட்டோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+