குண்டாஸ்: அய்யர் மனு விசாரணைக்கு ஏற்பு
சென்னை:
தன்னைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்ட விரோதமானது என்று கூறி காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன் உட்பட 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அய்யரும், கதிரவனும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆனால் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுவிக்க முடியாது என்று நீதிபதி முருகேசன் கடந்த 31ம்தேதி தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து தன்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யது சட்டவிரோதமானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தரேசஅய்யர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் மற்றும் நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கிய டிவிஷன்இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது இது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
ரஜினி, மாட்டு பாஸ்கர், அனில் ஆகியோரும் தங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்ஹேபியல் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications