சட்டசபையில் ஜி.கே. மணி பட்டபாடு !!
சென்னை:
ஆங்கிலத்தில் சினிமா பெயர் வைப்பது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பாமக தலைவர் ஜி.கே. மணிக்கும் இடையேசட்டசபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு ஜி.கே. மணி பேசியதும் அதற்குஜெயலலிதா அளித்த பதில்களும் வருமாறு:
ஜி.கே. மணி: தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்கள் எல்லாம் முழுமையாக நிறைவேறி இருக்கிறதா என்பதை ஆளுநர் உரையில்தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யப்படவில்லை.
ஜெயலலிதா: கடந்த 2001ம் ஆண்டு முதல் இதுவரை 224 திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 214 திட்டங்கள்நிறைவேற்றப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் 10 திட்டங்களும் விரைவில் நிறைவேற்றப்படும்.
ஜி.கே. மணி: 10 திட்டங்கள் தான் நிறைவேற்றப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் என்னிடம் 26 திட்டங்கள்நிறைவேற்றப்படாததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. ஊராட்சி ஒன்றிய தலைவர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும்படிசெய்வோம் என்று அறிவித்திருந்தீர்கள். ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை.
ஜெயலலிதா: அதற்கான சட்டத்தை மத்திய அரசுதான் நிறைவேற்ற வேண்டும். உங்களிடம் இருக்கும் மத்திய அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் இதற்கான சட்டத்தை நிறைவேற்றுங்கள்.
ஜி.கே. மணி: மத்திய அமைச்சர்களை மாநில அரசு அணுகி கலந்தாலோசித்தால் அவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். காவல்துறைக்கு தலைமை அலுவலகம் கட்டப் போவதாக அறிவித்தீர்களே, அது என்னவாயிற்று?
ஜெயலலிதா: அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இன்னும் ஓராண்டிற்குள் கட்டி முடிக்கப்படும்.
ஜி.கே. மணி: தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்...
ஜெயலலிதா (குறுக்கிட்டு): சினிமா படங்களுக்கு பெயர்களை நிர்ணயிப்பதும், திரைப் படத்தில் எந்தக் காட்சியை வைக்கலாம்என்பதை முடிவு செய்வதும் மத்திய ஒளிபரப்புத்துறையின் கீழ் உள்ள குழு தான். அதில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும்கிடையாது.
ஜி.கே. மணி: இப்படியே போனால் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் தமிழ் அழிந்து விடும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.
சபாநாயகர் காளிமுத்து: கணிப்பொறியில் இடம்பெறாத மொழிகள்தான் அழிந்து விடும் என்று யுனெஸ்கோ கூறியது.கணிப்பொறியில் தமிழ் இடம்பெற்றுவிட்டதால், தமிழ் என்றும் அழியாது.
ஜெயலலிதா: தமிழைக் காப்பதில் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்கு இப்போதைய அரசு செயல்பட்டு வருகிறது.அறிவியல் தமிழ் என்ற பாடத்தைக் கொண்டு வந்தது இந்த அரசுதான்.
எம்.எல்.ஏ. வளர்மதி: சைக்கிள், டீ போன்ற சொற்களை ஜி.கே. மணி தமிழில்தான் சொல்வாரா? அவரது இனிஷியலேஆங்கிலத்தில்தான் உள்ளது.
ஜி.கே. மணி: முடிந்தவரை தமிழில் பேச வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இதை சொல்கிறோம். இதற்காக பல்வேறுபுத்தகங்களை அச்சிட்டு, பொது இடங்களில் வினியோகித்து வருகிறோம்.
ஜெயலலிதா: அப்படியானால், சைக்கிளில் உள்ள எல்லா பாகங்களையும் ஜி.கே. மணி தமிழில் கூற வேண்டும்.
(இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர், சைக்கிள் பாகங்களை தமிழில் கூறுமாறு ஜி.கே. மணியைவற்புறுத்தினார்கள்)
ஜெயலலிதா: அவர் வெளியிட்ட புத்தகத்தை அவரே படிக்கவில்லை போலிருக்கிறது.
காளிமுத்து: சைக்கிளில் 200 பாகங்கள் இருந்தாலும் அதற்கு தமிழ் வார்த்தைகள் இல்லை. அதனால்தான் அறிவியல் தமிழ் என்றபாடத்தை முதல்வர் அறிமுகம் செய்தார். அதைப் படித்து அறிவியல் தமிழ் வார்த்தைகளை ஜி.கே. மணி தெரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடந்தது.












Click it and Unblock the Notifications